o kurkure
ஆரோக்கிய உணவு

சுவையான உருளைக்கிழங்கு குர்குரே

மாலை வேளையில் உருளைக்கிழங்கை வைத்து பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிட்டு போர் அடித்திருந்தால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள உருளைக்கிழங்கு குர்குரே ரெசிபியை செய்து பாருங்கள். இந்த ரெசிபியானது செய்வதற்கு எளிமையாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும்.

அதுமட்டுமின்றி, இங்கு இந்த ரெசிபியின் செய்முறை மற்றும் அதன் வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து முயற்சி செய்து பாருங்கள்.

 

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 1 கப் (வேக வைத்து மசித்தது)

புதினா – 1/2 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

மைதா – 1/2 கப்

அவல் – 1/2 கப் (ஓரளவு பொடி செய்தது)

தண்ணீர் – 1/2 கப்

எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் மசித்த உருளைக்கிழங்கு, புதினா, பச்சை மிளகாய், சீரகப் பொடி, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக பிடித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பௌலில் மைதா மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

அதே சமயம் ஒரு தட்டில் ஓன்றிரண்டாக பொடி செய்த அவலை வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

எண்ணெயானது சூடானதும், உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை மைதாவில் நனைத்து, பின் அவலில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து உருண்டையையும் பொரித்து எடுத்தால், உருளைக்கிழங்கு குர்குரே ரெடி!!!

Related posts

வேகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?

nathan

யாரெல்லாம் பச்சை வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது தெரியுமா?

nathan

கருவாடு சாப்பிடுவது நல்லது தானாம்; தெரிஞ்சிக்கங்க…

nathan

கழிவுகளை 5 நிமிடத்தில் அடித்து விரட்டும் கோதுமை புல் ஜூஸ்!தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்!!

nathan

தெரிஞ்சிக்கங்க…பிளாக் டீ குடிப்பதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

nathan

இஞ்சிப்பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

nathan

சுவையான முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி?…

nathan

வெளியிட்ட தகவல்.. !பரவும் கிருமிகளை அழிக்க பயன்படும் செம்பு பாத்திரம்..

nathan