29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
kozhi porichath 18758.580
அசைவ வகைகள்

சிக்கன் வறுவல்

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் – 1/4 கிலோ மிளகு – 1 டீஸ்பூன் மிளகு தூள் – 4 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது) வரமிளகாய் – 3 கறிவேப்பிலை – சிறிது வெங்காயம் – 2 ( 1 அரைத்தது, மற்றொன்று நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் வினிகர் – 2 டீஸ்பூன் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு

செய்முறை:
முதலில் சிக்கனை நன்க கழுவி, நீரை நன்கு வடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த சிக்கனில், வினிகர், அரைத்த வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகு, வரமிளகாய், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் மீதமுள்ள மிளகுத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனை போட்டு, ஒரு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்பு அதனை ஒரு தட்டை வைத்து மூடி, சிக்கன் வேகும் வரை மூடி அவ்வப்போது கிளறியும் விட வேண்டும். சிக்கனானது மென்மையானதும், அதனை இறக்கி, கொத்தமல்லி தூவி மூடி வைக்க வேண்டும். இப்போது அருமையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி!!
kozhi porichath 18758.580

Related posts

சூப்பரான கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்

nathan

மிளகு சிக்கன் டிக்கா செய்வது எப்படி

nathan

சுவையான ஆ‌ட்டு‌க்க‌றி தொ‌க்கு

nathan

சூப்பரான கிராமத்து மீன் குழம்பு

nathan

விருதுநகர் மட்டன் சுக்கா

nathan

சுவையான முட்டை குருமா செய்வது எப்படி

nathan

மீன்ரின்வறை

nathan

செஸ்வான் சிக்கன் நூடுல்ஸ்

nathan

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan