29.8 C
Chennai
Saturday, May 10, 2025
jibpv 243613
மருத்துவ குறிப்பு

கர்ப்ப காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும். முட்டைகோஸில்

ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

• மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம்,பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்
.
• கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப்பிறக்கும் என்பதும் மூடநம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை’ மெலனின்’ எனப்படும் நிறமிகளே!

• கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிடவேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.

• வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளைகட்டியதானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.

• பிரசவ காலத்துக்குப் பின் வயிற்று தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். கர்ப்பிணிகளின் உடலுக்கு இயற்கையான குளிர்ச்சியைத் தருகிறது வாழைப்பழம். உடல் காரணங்களால் மட்டுமல்ல. உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டைவாழைப்பழம் நீக்குகிறது.

• கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது
தவறு.

• கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்சனை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.

• தைராய்டு, சுகர் போன்ற பிரச்சனைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.

• தாய்ப்பாலைச் சேமித்துக் கொடுப்பது நல்லதல்ல. தவிர்க்கமுடியாத பட்சத்தில், சுத்தமான பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கலாம். சாதாரண அறை வெப்பத்தில் 6மணி நேரம் வரை கெடாமல் இருக்கும்,
jibpv 243613

Related posts

பற்களில் கூச்சம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள்!!!

nathan

காதல் பார்வை பற்றி பெண்களின் கருத்து

nathan

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் உண்டாகமல் இருக்க இத சாப்பிடுங்க..!

nathan

மூக்கு ஒழுகல் தொல்லை தாங்க முடியலையா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

ஒரு கேள்வி உங்கள் வாழ்க்கையை மாற்றும்

nathan

தொிந்துகொள்ளுங்கள்! மரணத்தை உண்டாக்கும் நோய்களைத் தடுக்கும் சூப்பர் உணவுகள்!

nathan

உங்க பாத்ரூம் ‘கப்பு’ அடிக்குதா? அதைப் போக்க சில வழிகள்!!!

nathan

மாதவிடாய் காலத்தில் பலம் இழக்கும் எலும்புகள்

nathan