மருத்துவ குறிப்பு

தினம் ஒரு நெல்லிக்காய்

முடி நன்கு வளர்வதற்கு நெல்லிக்காய் சாப்பிட வேண்டும் மற்றும் நெல்லிக்காய் எண்ணெய் பயன்படுத்த வேண்டும் என்று சொல்வார்கள்.

மேலும் உடல்நல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் வைத்தியங்களிலும் நெல்லிக்காய் பயன்படுகிறது. ஏனெனில் நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவைகள் வளமாக நிறைந்துள்ளது.

உடல் எடை குறைப்பிற்கும் நெல்லிக்காய் ஜூஸ் பயன் தரும்.

நெல்லிக்காய் கசப்பாக இருந்தாலும், இதனை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், முடி பிரச்சனைகள், சரும பிரச்சனைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும்.

குறிப்பாக நெல்லிக்காய் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் மற்றும் இரத்த சோகை நீங்கும்.

நன்மைகள் :

புற்றுநோய் :
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும். மேலும் ஆய்விலும் நெல்லிக்காய் சாப்பிடுவதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடைப்படும் என்று தெரிய வந்துள்ளது.

பெப்டிக் அல்சர் :
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.

எடை குறையும் :
நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும்.

குடலியக்கம் :
நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவராயின், நெல்லிக்காய் சாப்பிட்டு வாருங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

உயர் இரத்த அழுத்தம் :
நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். மேலும் நெல்லிக்காய் மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்தும். அதிலும் நெல்லி பொடியை தேனுடன் கலந்து தினமும் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

பார்வை மேம்படும் :
நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களின் ரெட்டினாவை பாதுகாக்கும். இதில் வைட்டமின் சி வளமாக இருப்பதால், பார்வை மேம்படுவதோடு, கண்களில் இருந்து தண்ணீர் வருவது, கண் எரிச்சல், கண்கள் சிவப்பது போன்றவை தடுக்கப்படும்.

இரத்த ஓட்டம் மேம்படும் :
நெல்லிக்காய் உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். மேலும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால், அவற்றைத் தடுத்து, இதயத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

நீரிழிவை தடுக்கும் :
நெல்லிக்காய் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும். எனவே நீரிழிவு நோயாளிகள் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து குடித்து வருவது நல்லது. இது உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.

கல்லீரலுக்கு நல்லது :
நெல்லிக்காய் கல்லீரலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, கல்லீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கல்லீரல் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதய தசைகளை வலிமையாக்கும் :
நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்றுஉட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
Amla

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button