மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க… எடை தூக்கும் பயிற்சி பற்றி உங்களுக்கு தெரியாத 9 விஷயங்கள்!!!

உடல் ஆரோக்கியம் மற்றும் கட்டுகோப்பைப் பற்றி பேசுகையில் எடை தூக்கும் பயிற்சி என்பது அதிகமாக பேசப்படும் அதன் முக்கிய அம்சமாகும். இதில் பல விதமான பயன்கள் இருந்தாலும் கூட எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இருக்கத் தான் செய்கிறது.

உடல் எடை பயிற்சியைப் பற்றி சில முக்கியமான விஷயங்களைப் பற்றி நாங்கள் ஆய்ந்து அறிந்துள்ளோம். எடை தூக்கும் பயிற்சியின் சில சாதகங்களையும், பாதகங்களையும் இப்போது பார்க்கலாம். அதை வைத்துக் கொண்டு எடை தூக்கும் பயிற்சியின் பாதகங்களை விட, அதன் சாதகங்களின் கை ஓங்கி இருக்கிறதா என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

தசை மேம்பாடு மற்றும் தசை வளர்ச்சிக்கு எடை தூக்கும் பயிற்சி ஒரு முக்கிய அங்கம் என்பதை தனியாக கூற தேவையில்லை. இதனை மனதில் வைத்துக் கொண்டு, எடை தூக்கும் பயிற்சியின் சாதகங்கள் மற்றும் பாதகங்களை அலசலாம், வாங்க!

எடை தூக்கும் பயிற்சியைப் பற்றி உங்களுக்கு தெரியாத 9 தகவல்கள், இதோ!

மெஷின் வெயிட்களை விட ஃப்ரீ வெயிட்கள் தான் சிறந்தது

தசையை வளர்ப்பதில் நீங்கள் நாட்டமுடன் இருந்தால், ஃப்ரீ வெயிட்கள் (பளு தூக்கல்) தான் அதிக தசைகளை செயல்பட வைத்து அதற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முக்கிய காரணமே ஃப்ரீ வெயிட்கள் செய்திட அதனை நகர்த்திட அதிக தசைகள் தேவைப்படும். இதனால் மெஷின் வெயிட்டை காட்டிலும் இதில் உடல் உறுதிப்படும்.

இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகளில் இருந்து விலகியே இருக்கவும்

நீங்கள் நினைப்பதை விட, இயற்கைக்கு மாறான உடற்பயிற்சிகள் காலப்போக்கில் அதிக தீமையை விளைவிக்கலாம். இது தசைகளை வேகமாக வளர்க்க உதவினாலும், தசைகளில் புண்களை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, உங்கள் கைகளை மடக்கி கொண்டு டம்பெல்லை தூக்கினால் அது இயல்பு முறை. அதனை தொடர்ந்து அப்படியே மீண்டும் ஆரம்பித்த நிலைக்கு வந்தால் இந்த அசைவை இயற்கைக்கு மாறான அசைவாக கருதுவோம். அதனால் டம்பெல்லை தூக்கி கொண்டிருக்கும் போதே அதிகமாக ஸ்ட்ரெச் செய்து மீண்டும் ஆரம்பித்த நிலைக்கு செல்ல முற்படாதீர்கள்.

அளவுக்கு அதிகமான கார்டியோ பயிற்சி தசை வளர்ச்சியை தடுக்கும்

தசைகளை வளர்க்கும் எண்ணத்தை நீங்கள் கொண்டிருக்கும் போது, கார்டியோ உடற்பயிற்சிகளை அளவுக்கு அதிகமாக செய்வது உங்கள் இலட்சியத்தை அடைய விடாது. அளவுக்கு அதிகமான கார்டியோ உடற்பயிற்சிகள் எடை தூக்கும் பயிற்சியில் நன்மைகளுக்கு முட்டுக் கட்டையாக விளங்கும்.

கைகோர்க்கும் கார்டியோ மற்றும் எடை தூக்கும் உடற்பயிற்சி

இதற்கு முன் நாம் கூறியதற்கும் இதற்கும் நிறைய முரண்பாடு தெரியலாம். ஆனால் கண்டிப்பாக அப்படி இல்லை. ஒரே நேரத்தில் கொழுப்பையும் எரித்து, தசைகளையும் வளர்க்க முடியாது. இருப்பினும் கார்டியோ உடற்பயிற்சிகளால், உங்கள் தசைகளை தான் வார்ம் அப் செய்கிறீர்கள். இதனால் சற்று கொழுப்பும் குறைகிறது. இது தசை வளர்ச்சிக்கு உதவி, தசைகளை திறம்பட செயல்பட வைக்கும்.

எடை தூக்கும் பயிற்சிக்கு பின் ஸ்ட்ரெச்சிங்

தற்போது புதிய நாகரீகமாக விளங்குகிறது திடமான உடல். எடை தூக்கும் பயிற்சியை முடித்த கையேடு நீட்சியில் ஈடுபட்டால், நீங்கள் நினைத்ததை விட உங்கள் உடல் வேகமாக திடமாக காணப்படும் என ஆராய்ச்சிகள் கூறுகிறது.

நன்கு வளர்த்த தசை என்றால் அதற்காக நீங்கள் திடமானவர் என்று அர்த்தமில்லை

நல்ல தசையுடன் “x” என்று ஒருவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அதே போல் சற்று குறைவான தசையுடன் “y” என்று ஒருவர் இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். நாம் அனைவரும் அறிந்ததை போல் x-ஐ விட y தான் திடமானவராக இருப்பார். தசை வளர்ச்சிக்கும் திடமாக இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை.

தவறான முறையில் ஸ்டீராய்டு பயன்படுத்துதல்

பலன் பெறுவதை துரிதப்படுத்த இப்போதெல்லாம் பலர் ஸ்டீராய்டுகள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். ஸ்டீராய்டுகளால் ஏற்படும் தீமைகள் பல – டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறையும், சீக்கிரமே வயசானவர் போன்று காணப்படுவீர்கள், ஆண்களுக்கு மார்பகங்கள் உண்டாகும்.

பெஞ்ச் ப்ரெஸ் என்பது மிக ஆபத்தான எடை தூக்கும் பயிற்சியாகும்

பளு தூக்கும் போது தவறி போட்டு அல்லது அடைப்பு ஏற்பட்டு ஒவ்வொரு வருடமும் சிலர் இறக்கின்றனர். பெஞ்ச் ப்ரெஸ் செய்யும் போது பிறரின் உதவியை நாடுவது மிகவும் அவசியமாகும். மேலும் ஆரம்ப கட்ட பயிற்சியின் போது அதிக எடை உள்ள பளுவை தூக்காதீர்கள்.

பைசெப்ஸை விட ட்ரைஸெப்சே பெரியது

சதைப்பற்றுள்ள கை தசைகளுக்கு பைசெப்ஸ் தான் பங்களிக்கிறது என நீங்கள் நினைத்தால் அது தவறு. பைசெப்ஸை விட ட்ரைஸெப்சே பெரியது.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button