முகப் பராமரிப்பு

இதோ சில டிப்ஸ்… ஆண்களே! உங்க தாடி மென்மையா இருக்க வேண்டுமா?

பொண்ணுங்கன்னா அகத்துல ஆசை வளரனும்!!! ஆம்பளைங்கன்னா முகத்துல மீசை வளரனும்!!! இப்படி டி.ஆர். மாதிரி வசனம் பேசும் போதே ஆண்களுக்கு மீசை எவ்வளவு பெரிய கௌரவப் பொருள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பருவம் தொடங்கும் முன்னரே அரும்பும் மீசையை முறுக்கிவிட்டபடி திரிவதுதான் ஆண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுவும் தமிழர்களுக்கு மீசை ஒரு வீர அடையாளம்.

வீரத்தையும் தாண்டி மீசையும், தாடியும் ஆண்களை எழும் அழகானவர்களாகவும், கம்பீரம் உடையவர்களாகவும் எடுத்துக்காட்டும். இப்போதெல்லாம் பெண்களுக்கு மீசை, தாடி உள்ள ஆண்களை தான் அதிகம் விரும்புகின்றனராம். காரணம், அவர்கள் தான் நாம் மேல் கூறியப்படி, கம்பீரமான ஆண்மகனாக திகழ்கின்றனர் என பெண்கள் கருதுகின்றனர். இன்றைய இளைஞர்கள் வகை வகையாக மீசை, தாடி வைத்து தூள் கிளப்புகின்றனர். சரி, இந்த மீசை மற்றும் தாடியை எப்படி பராமரிப்பது என உங்களுக்கு தெரியுமா? தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்…

அரிப்பு

தாடி வளர்க்கும் போது முதலில் கொஞ்சம் அரிப்பது போல தான் இருக்கும். ஆனால், இது இரண்டாம் வாரத்திலிருந்து சரியாகிவிடும். மற்றும் முகத்தில் முடி வளர்வதால் அழுக்க சேர வாய்ப்பு உண்டு. எனவே, முகம் கழுவும் போது தாடி பகுதியில் லிக்யூட் சோப்பு போட்டு முகம் கழுவவும்.

நேரம் வரை காத்திருக்கவும்

நன்றாக, ஸ்டைலாக தாடி வைக்க வேண்டுமெனில், நீங்கள் முதலில் ஒன்றிரண்டு மாதங்களாவது நன்றாக தாடி வளர்க்க வேண்டும். ஏனெனில், தாடி நன்றாக வளர்ந்திருந்தால் ஸ்டைலாக தாடி வைக்க ஏதுவாக இருக்கும்.

ஷாம்பு

பெரும்பாலான ஆண்கள் தங்கள் தாடியை நன்றாக வளர்கின்றனரே தவிர சரியாக பராமரிப்பது இல்லை. வாரம் இரண்டு முறையாவது உங்கள் தாடியை ஷாம்பு அல்லது லிக்யூட் சோப்பு போட்டு கழுவ வேண்டியது அவசியம்.

சோப்பு பயன்படுத்தாதீர்கள்

சோப்பு உபயோகப்படுத்துவதினால் முகத்தில் வறட்சி ஏற்படும். இதனால் தாடி முடிகள் உடையவும், உதிரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. தாடி பராமரிப்பில், இது ஒரு முக்கியமான விஷயமாகும்.

ட்ரிம்மர்

குறைந்த விலையில் கிடைக்கிறது என கண்ட ட்ரிம்மர் வாங்காமல். நல்ல பிராண்டட் ட்ரிம்மர் வாங்குங்கள். இயல்பாக மென்மையான தன்மை கொண்டது நமது முகத்தின் சருமம் இதில், சில விலைக்குறைந்த ட்ரிம்மர்கள் உபயோகப்படுத்தும் போது உங்கள் சருமத்தில் சிராய்ப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஜெல் உபயோகப்படுத்துங்கள்

முடிந்த வரை ஷேவ்விங் செய்யும் போது சோப்புக் கட்டியை பயன்படுத்துவதை தவிர்த்து, ஷேவ் ஜெல் உபயோகப்படுத்துங்கள். சோப்பில் இருக்கும் TFM அளவு உங்களது சருமத்தை வரட்சியடைய செய்யலாம். ஆனால், ஜெல் உபயோகப்படுத்துவதனால் உங்களது சருமம் மிருதுவாக இருக்கும்.

ட்ரிம்மிங்

அவ்வப்போது உங்கள் தாடியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சரியாக ட்ரிம் செய்துவிடுங்கள். இல்லையேல், முடியின் தடிமன் உங்கள் தாடியின் ஸ்டைலை மாற்றிவிடும்.

ஹேர் கலர்

உங்கள் தாடியை ஹேர் கலர் செய்கிறேன் என்று கண்ட இரசாயன பொருள் கலந்த சாயங்களை உபயோகப்படுத்த வேண்டாம். ஏனெனில், இதன் மூலம் சரும பாதிப்புகளும், மற்றும் முடியிலும் பிரச்சனைகள் ஏற்படும்.

கற்றாழை ஜெல்

முகத்தில் கற்றாழை ஜெல் அப்பளை செய்து வந்தால், சருமம் மிருதுவாகும் மற்றும் முடியின் கடினமான தன்மை குறையும்.

நல்ல உறக்கம்

உங்களது உறக்கத்தின் நேரம் குறையும் போது, தாடியின் வளரும் தன்மையும் குறைகிறது. எனவே, உறக்கத்தை கெடுத்துக் கொள்ளதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button