அழகு குறிப்புகள்

வெளிவந்த தகவல் ! நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று….

கணவர் சரத்குமாருடன் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்து வருகிறது.

இதைத் தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில்,2021 ஆரம்பத்தில் முதலிரண்டு மாதங்கள் குறைந்திருந்த கொரோனா தொற்றுப் பாதிப்பு கடந்த 6 வாரங்களாக அதிகரித்துள்ளது.

கொரொனாவால் சாதாரண மக்கள் முதல் நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தமிழ் சினிமாவின் நடிகையும், சின்னத்திரை லேடி சூபப்ர் ஸ்டாருமான ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலிருந்து விலகி கணவர் சரத்குமாரின் சமக கட்சியின் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நடிகை ராதிகா சரத்குமாருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செக் மோசடி தொடர்பில் சரத்குமார் மற்றும் மனைவிக்கு ஒருவருடம் நீதிமன்றம் தண்டனை வழங்கியதையடுத்து தற்போது கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் கைது செய்யாமல் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இதை செய்தால் போதும்..! முகத்தில் எண்ணெய் வழிகிறதா.?

nathan

கருவளையத்தை போக்கும் குறிப்புகள்: ….

sangika

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால்

nathan