முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சோர்ந்து காணப்படும் முகத்தை பொலிவாக்கும் சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகள்!

உங்கள் முகம் எப்போதும் சோர்ந்து காணப்படுகிறதா? கண்ணாடியில் முகத்தைப் பார்த்தால் முகம் கருப்பாக காட்சியளிக்கிறதா? எவ்வளவு க்ரீம்களைக் கொண்டும் சருமத்தைப் பராமரித்தால் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லையா? இயற்கை வழியில் உங்கள் அழகை மேம்படுத்த நினைக்கிறீர்களா? இதற்கு வீட்டு சமையலறையில் உள்ள மஞ்சள் தூள் நல்ல நிவாரணம் அளிக்கும்.

முக்கியமாக மஞ்சள் தூள் முகப் பொலிவை அதிகரிப்பதோடு, பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற பல சரும பிரச்சனைகளையும் போக்கும். அக்காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் மஞ்சளை அன்றாடம் பயன்படுத்தி வந்ததால் தான், அவர்கள் நீண்ட காலம் இளமையான தோற்றத்தில் காணப்பட்டார்கள்.

அத்தகைய மஞ்சளைக் கொண்டு ஒருவர் அடிக்கடி வீட்டிலேயே ஃபேஸ் பேக் போட்டு வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு போன்ற மருத்துவ பண்புகளால் சருமத்தின் அழகு மேம்படும். உங்களுக்கு முகத்தின் பொலிவை இயற்கை வழியில் அதிகரிக்க வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில மஞ்சள் ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்கள்.

மஞ்சள், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர்

* ஒரு பௌலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இறுதியில் நேச்சுரல் ஸ்கின் டோனரான ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தைத் துடையுங்கள்.

மஞ்சள் தூள், லாவெண்டர் ஆயில் மற்றும் தயிர்

* ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த ஃபேஸ் பேக் கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.

மஞ்சள் தூள் மற்றும் தேன்

* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனில் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 3-4 முறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் தூள், ஆலிவ் ஆயில் மற்றும் சந்தன பவுடர்

* ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன பவுடர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் அந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவுங்கள்.

* 15 நிமிடம் நன்கு காய வைத்து, இறுதியில் நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள் தூள் மற்றும் பால்

* ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பால் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* இறுதியில் நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

மஞ்சள் தூள் மற்றும் பாதாம் ஆயில்

* 1 சிட்டிகை மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் பாதாம் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இச்செயலை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள் தூள் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு

* ஒரு பௌலில் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

* பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் நன்கு காய வையுங்கள்.

* இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்துங்கள்.

மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் கற்றாழை ஜெல்

* ஒரு சிறிய பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை நன்கு கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த முகம் பொலிவோடு இருக்கும்.

Related posts

இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும்…..

sangika

உங்க முகம் பத்தே நிமிடங்களில் புத்துணர்ச்சி பெற சில டிப்ஸ்

nathan

தெரிஞ்சிக்கங்க… தாடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா…?

nathan