முகப்பரு

முகபரு வருவதற்கான காரணங்கள்???,முகபரு மறைய??? முகபரு வருவதற்கான காரணங்கள்

1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது.

2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்

3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.

4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்

முகபரு மறைய 10 டிப்ஸ்: ————-

1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்

2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்

3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்

4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்

5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்

6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் லுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்

8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,

9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும்

10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்

கரும்புள்ளிகள் மறைய:
1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்
2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .
3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .
11201493 1025963317424400 4281550219436901260 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button