மருத்துவ குறிப்பு

இவை வெறும் வலியென நினைத்து வீட்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டாம் – அபாயமாக மாறலாம்!!

சிலர் மிகவும் பெருமையாக கூறுவார்கள், “என் வாழ்க்கையில நான் எல்லா ஹாஸ்ப்பிட்டல் பக்கமே போனதில்ல தெரியுமா..” என்று. இவர்களுக்கும் உடல்நல பிரச்சனைகள் வரும் ஆனால், மருத்துவமனை அல்லது மருத்துவரை அணுகாமல் இவர்களே மருத்துவம் பார்த்துக் கொள்வார்கள். இது அனைத்து நேரங்களிலும் தீர்வளிக்காது என்பது தான் உண்மை.

சில சமயங்களில் நாம் சாதாரணமான கோளாறாக நினைப்பவை அபாயத்தின் அறிகுறியாக இருக்கலாம். கை, கால், தோள்ப்பட்டை வலி எலும்பு சார்ந்த பெரும் பிரச்சனையின் ஆரம்பமாக இருக்கலாம். எனவே, எதுவாக இருந்தாலும் நீங்களாக முடிவெடுக்காமல் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

காய்ச்சலின் போது
காய்ச்சல், மயக்கம் ஏற்படும் போது மூட்டு பகுதிகளில் சிவந்து வீக்கம் காணப்படுவது முடக்கு வாதமாக இருக்கலாம். இது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது எனில் செயலிழப்பு ஏற்பட கூட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே, வீட்டில் இருந்து வீட்டு சிகிச்சை மேற்கொள்ளாமல், மருத்துவரை கண்டு சிகிச்சை மேற்கொள்வது தான் சரியான தீர்வளிக்கும்.

தோள்பட்டை பகுதியில்
தோள்பட்டை பகுதியில் இறுக்கமாக பிடித்தது போல அசௌகரியமான வலி ஏற்படுவது மார்பு முடக்குவலியாக (Angina Pectoris) இருக்கக் கூடும். இதயத்தில் சரியான முறையில் இரத்த சுழற்சி ஏற்படவில்லை எனில் இவ்வாறு நடக்கும்.

தசை வலி
தசையில் வலி அல்லது மிகுதியான தசைப்பிடிப்போடு சேர்த்து அவ்விடத்தில் நிறமிழப்பு ஏற்படுவது உறுப்புகளுக்கு செல்லும் வழியில் இரத்த கட்டிகள் எற்பட்டுள்ளதற்கான அறிகுறியாக கூட இருக்கலாம்.

நாள்பட்ட முதுகு வலி
நாள்பட்ட முதுகுவலி அல்லது மரத்துப்போனது போன்ற உணர்வு, கை கால் மூட்டுகளில் வலுவின்மை போன்றவை அபாயமான பிரச்சனையாக மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, உடனே நீங்கள் மருத்துவரிடம் பரிசோதித்து தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

இரவு வலி ஏற்படுவது
இரவு நேரத்தில் மிகவும் கடிமையாக உடலில் ஆங்காங்கே வலி ஏற்படுவது. உறங்க முடியாத அளவு அசௌகரியங்களை ஏற்படுத்துவது போன்ற வலி எலும்பு சார்ந்த பிரச்சனை அல்லது எலும்பு புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.
29 1446098233 1fivetypesofpainyoushouldnottreatathome

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button