மருத்துவ குறிப்பு

மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவ முறை விளக்கம்

உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.

சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.

இளைத்தவனுக்கு எள்ளு,
கொழுத்தவனுக்கு கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.

stock photo 10218832 human body for study from slim man to the overweight
தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
தேற்றான் கொட்டை லேகியம்.

இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த “தேற்றான் கொட்டை லேகியம்” உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.

இதில் கூறப்பட்டுள்ள மூன்று முறைகளையும் கடை பிடித்து வாருங்கள். மூன்று மாதங்களில் உடல் பருமனாக காணலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button