முகப் பராமரிப்பு

முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர் நமது
உடல் நிலை,மற்றும் மனதின் நிலைகளை முகத்
தினைக் கண்டே அறியலாம். மேலும் உடலின்
அழகினையும் முகத்திலேயே காணலாம்.

இன்றைய நாகரீகஉலகில் தன்னை அழகு படுத்திக்
கொள்ள அனைவரும் விரும்புகின்றனர் குறிப்பாக
முகம் அழகாக இருக்க வேண்டுமென விரும்புகின்
றனர்.இதற்காக ஏராளமான சோப் வகைகள்,கிரீம்
வகைகள் கடைகளில் கிடைக்கின்றன. மேலும்
பியூட்டி பார்லர்களுக்குச் சென்று ஏராளமான பணம்
செலவு செய்கின்றனர்.

இதற்கு வீட்டிலிருந்தபடியே சுலபமாகவும்,செலவி
ல்லாமலும்,பக்கவிளைவுகள் இல்லாமலும் செய்து
கொள்ளக்கூடிய சித்த மருத்துவ முறையில் ஒரு
முக அழகுக் கலவை.

முகப்பரு,கரும்புள்ளி நீங்க,சிவப்பு அழகு பெற :

தேவையான பொருட்கள்:-செய்முறை :

1 – முல்தானி மட்டி பொடி – 200,கிராம்
2 – கஸ்தூரி மஞ்சள் பொடி – 50, கிராம்
3 – பூலாங்கிழங்கு பொடி – 50, கிராம்
4 -கோரைக் கிழங்கு பொடி – 50, கிராம்
5 -நன்னாரி வேர் பொடி -50, கிராம்,

இவைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்
கின்றன வாங்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்
கொள்ளவும்.இதனை இரண்டு டீஸ்பூன் அளவு
எடுத்து பால் சிறிது விட்டுக் குழப்பி முகத்தை
நீரில் கழுவித் துடைத்து விட்டு முகத்திலும்
கழுத்துப் பகுதிகளிலும் பூசி விட்டு அமர்ந்து
அரை மணிநேரம் கழித்து குளிர்ந்தநீரில் கழுவி
விடவும் .

இதே போல் வாரம் இரண்டு முறை செய்து வர
முகப்பரு ,கரும்புள்ளி, இவைகள் நீங்கும் மேலும்
முகத்தின் தோல் பகுதியில் உள்ள இறந்த செல்
களை அகற்றும்,முகம் மென்மையாகும்,சிவப்பு
அழகு கிடைக்கும்.
இது அனுபவ முறையில் கைகண்ட முறையாகும்.

முகத்தில் அம்மை வடு ,தழும்பு நீங்க :

1 — கருவேப்பிலை – ஒரு கை பிடி
2 – கசகசா – ஒரு டீ ஸ்பூன்
3 – கஸ்தூரி மஞ்சள் – சிறிய துண்டு
இதனை அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம்
கழித்து குளித்து வர அம்மை தழும்பு மறைந்துவிடும்.
facial+mask

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button