பட்டாணி பொரியல்

Posted Image

தேவையான பொருட்கள்:

வெள்ளை பட்டாணி – 1கப்
சின்ன வெங்காயம் – 1/4கப்
பூண்டு – 2பல்
சோம்பு – சிறிதளவு
நாட்டு தக்காளி – 2
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பட்டாணியை முதல் நாள் இரவே ஊறவைத்து அடுத்தநாள்குக்கரில் போட்டு பயறு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு 2 விசில் வைத்து வேகவைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு சிவந்ததும் பூண்டு, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கிய பின்பு தேவையான அளவு உப்பு, சாம்பார் பொடி, வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

நன்கு அனைத்தும் சுருண்டு வரும் அளவிற்கு நன்கு வதக்கவும்.

சுவையான பட்டாணி பொரியல் தயார்.. இதனை அனைத்து வகையுடனும் சேர்த்து உண்ணலாம்.

Leave a Reply