கைவினைப் பூக்கள்

துணியில் பூக்கள் செய்வது எப்படி?

தேவையில்லாத துணிகள்- 10 கலர்கள்
தென்னங்குச்சி – 10
பசை-பச்சை கலர் பசை டேப்

எப்படி செய்வது?

தென்னங்குச்சியை நன்றாக கழுவி காயவைத்துக்கொள்ளவும். துணியில் 2 இஞ்ச் அகலமும் 40 இஞ்ச் நீளமும் அனைத்து கலரிலும் எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒவ்வொரு துணியில் பாதியளவு நீளத்தில் மட்டும் ஒவ்வொரு நூலாக பிரித்துக் கொள்ளவும். அகலம் 1/4 இஞ்ச் இருக்கும் வரைக்கும் பிரிக்கவும். இதே போல் அனைத்து கலரிலும் செய்து வைத்துக் கொள்ளவும்.பின்பு குச்சியில் பசையை தடவி பிரிக்காத பகுதியை இறுக்கமாக சுற்றிக் கொண்டே வரவும். கடைசியில் முடிக்கும் போது பசையை நன்கு தடவி ஒட்டி விடவும். மீதம் உள்ள பகுதியை பச்சை பசை டேப் சுற்றி விடவும். அழகான பூ தயார்.

IMG 1156

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button