29.4 C
Chennai
Saturday, Jul 27, 2024
06 1446809142 seepu seedai
சிற்றுண்டி வகைகள்

சீப்பு சீடை: தீபாவளி ஸ்பெஷல்

இந்த வருட தீபாவளிக்கு வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்ய நினைத்தால், சீப்பு சீடை செய்யுங்கள். இது பார்ப்பதற்கு அற்புதமாக இருப்பதோடு, அருமையான சுவையில், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த சீப்பு சீடையை எப்படி எளிமையாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


06 1446809142 seepu seedai
தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப்
உளுத்தம் மாவு – 1/4 கப்
கடலை மாவு – 1/4 கப்
கெட்டியான தேங்காய் பால் – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
சுடுநீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் அரிசி மாவு, உளுத்தம் மாவு மற்றும் கடலை மாவு சேர்த்து, அத்துடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து கையால் பிசைய வேண்டும்.

பின்னர் அதில் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். தேங்காய் பால் போதாமல் இருந்தால், சுடுநீரை கொஞ்சம் ஊற்றி பிசைந்து கொள்ளலாம்.

பின்பு முறுக்கு உழக்கை எடுத்துக் கொண்டு, தட்டையாக சீப்பு போன்று இருக்கும் அச்சை எடுத்து பொருத்தி, பின் அதில் மாவை வைத்து, ஒரு தட்டில் நேராக ஒரு கோடு போன்று பிழிய வேண்டும். பின் கத்தியால் சிறு துண்டுகளாக வெட்டி, பின் அதனை உருட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ளதைப் போட்டு பொரித்து எடுத்தால், சீப்பு சீடை ரெடி!!!

Related posts

மாலை நேர ஸ்நாக்ஸ் கச்சோரி

nathan

உருளைக்கிழங்கு சீஸ் பாலக் ரொட்டி

nathan

மினி வெஜ் ஊத்தப்பம்

nathan

கம்பு பாலக் கீரை தட்டு ரொட்டி

nathan

ரோஸ் லட்டு

nathan

சுவையான அரிசி பக்கோடா

nathan

தனியா துவையல்

nathan

சத்தான கம்பு காய்கறி கொழுக்கட்டை

nathan

ருசியான அவல் போண்டா செய்வது எப்படி?!

nathan