மருத்துவ குறிப்பு

பீட்ரூட்டின் சில மருத்துவப் பயன்

செக்கச் செவேல் சிவப்பு நிறத்துடன் நியை சத்துகளையும் கொண்ட காய், பீட்ரூட். இது பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட பெருமை பெற்றுத்திகழ்கிறது. பீட்ரூட்டின் சில மருத்துவப் பெயன்களைபெயன்க இங்கே பார்க்கலாம்..

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத்தடவினால் தீப்புண், கொப்புளம் ஆகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயைக் குணப்படுத்தும், பீட்ரூட் ரத்த சோகையைக் குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமான சக்தியைக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலமிச்சைச் சாற்றில் தோய்த்து உண்டு வர, ரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வந்தால் அவை அனைத்தும் குணமாகும்.12189144 861557027291650 7931248597456613209 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button