அதிகமாக உணவு உட்கொள்கிறீர்களா? ஏற்படும் தாக்கங்கள் என்ன?

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சில அடிப்படையான பழக்கவழக்கங்கள் சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.

அன்றாட உணவு

அன்றாடம் நீங்கள் உண்ணும் உணவின் அளவு முக்கியமான ஒன்றாகும்.

ஏனெனில், நீங்கள் உண்ணும் உணவின் அளவு செரிமான செயல்முறையின் மீது வெகுவான தாக்கங்களை உண்டாக்கும்.

இரண்டு வேளைகளுக்கு நடுவே அதிகமான இடைவெளி எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாக உண்ணுவார்கள். இப்படி அதிகமாக உண்ணுவதால் செரிமான அமைப்பின் மீதான பளு அதிகரிக்கும். இதனால் அமில சுரப்பும் அதிகரிக்கும்.

மாறாக, சிறிய அளவில் அதிக முறை உண்ணவும் (ஒரு நாளில் 4-5 முறை).

மேலும், 30 நிமிடங்கள் உண்ணுபவர்களுக்கு அமில சுரப்பு 8.5 தடவை நடந்துள்ளது, அதுவே 5 நிமிடங்களில் உண்ணுபவர்களுக்கு 12.5 தடவை அமில சுரப்பு ஏற்பட்டுள்ளது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதிகமாக உட்கொண்டால் வயிற்றில் அதிகளவிலான உணவுகள் தேங்கும். இதனால் அளவுக்கு அதிகமான அமில உற்பத்தி ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

காலை உணவு

தொடர்ந்து 3 மாதங்களுக்கு காலை உணவைத் தவிர்க்கிற பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சி முறையற்றுப் போவது, ரத்தசோகை, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.

மூன்றே மாதங்களில் எடை அதிகரிப்பதும், மேலும் மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக்கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள்.

அது மாதவிலக்கை வரச்செய்வதுடன், கூடவே சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது, உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வளர்வது, எடை அதிகரிப்பது என போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

Leave a Reply