இடி சம்பல் (அ) இடிச்ச சம்பல்

தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – 6 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் – 4 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை – 1 கொத்து
சோம்பு – 1/2டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 2 (அ) பெரிய வெங்காயம் – சிறு துண்டு
புளி
உப்பு
எண்ணெய்


செய்முறை
எண்ணெய் காயவைத்து வரமிளகாய், கறிவேப்பிலை, சோம்பை வதக்கி எடுத்துக்கொள்ளவும். மிளகாயும் சோம்பும் விரைவில் பொரிந்துவிடும், கருகாமல் வறுக்கவேண்டும். கறிவேப்பிலை மொறுமொறுப்பாக பொரியும் வரை வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

ஆறியதும் அவற்றுடன் வெங்காயம் , புளி, உப்பு சேர்த்து சிறு உரலில் இடிக்கவும்.

எல்லாம் நன்றாக இடிபட்டதும்,

தேங்காய்த்துருவலைச் சேர்க்கவும்.

ஸ்பூனால் நன்றாக கிளறி கலக்கிவிடவும்.

எல்லாம் ஒன்றாக கலக்கும் வரை இடித்து எடுத்தால்,

இடி சம்பல் அல்லது இடிச்ச சம்பல் தயார். தேங்காய்ப் பூ சேர்த்த பிறகு நிறைய நேரம் இடிக்கக் கூடாது, தேங்காய் எண்ணெய் விட்டுவிடும். அதனால் கவனமாக இடிக்கவும்.

இலங்கை ரெசிப்பியான இது இட்லி, புட்டு, தோசை, தேங்காய்ப்பூ ரொட்டி மற்றும் ரொட்டியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

உப்புமா, பொங்கல் வகைகளுடனும் நன்றாக இருந்தது. சுடு சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம். இந்த ரெசிப்பியைக் கொடுத்த அம்முலு மற்றும் அதிராவுக்கு என் நன்றிகள்!

Leave a Reply