கார வகைகள்

இனிப்பு மைதா பிஸ்கட்

தேவையான பொருட்கள்(எந்த கப் எடுத்தாலும் எல்லாப் பொருட்களையும் அதிலேயே அளக்கவும்.)
பால் -1கிண்ணம்
சர்க்கரை -1கிண்ணம்
நெய் -3/4கிண்ணம்
மைதா -தேவையான அளவு***
எண்ணெய்
Shankarpali

செய்முறை
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பால்-சர்க்கரை-நெய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கவும்.
இதனுடன் மைதாவை சிறிது சிறிதாகச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.
Shankar+pali

***மைதா தேவையான அளவு என்று சொன்னாலும், சரியான பக்குவத்தில் இருந்தால் 3 கிண்ணம் மைதா தேவைப்படும். படம் 4-ல் பாருங்க, விஸ்க்கால் கலக்கும்போதே மாவு எப்படி பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வருதுன்னு. அப்பொழுது இரண்டரை கிண்ணம் மாவு சேர்த்திருந்தேன், பிறகும் இன்னும் அரைக் கிண்ணம் மாவு சேர்த்து பிசைந்ததும் 5வது படத்தில் இருக்கும் பக்குவம் வந்தது.

பிசைந்தமாவை காற்றுப்புகாமல் அரைமணி நேரம் மூடிவைக்கவும்.
மிதமான சூட்டில் எண்ணெய் காயவைக்கவும். பிசைந்த மாவை பெரிய உருண்டைகளாக்கி, தடிமனான சப்பாத்தியாக தேய்க்கவும்.
கத்தி (அ) பிஸ்ஸா கட்டர் கொண்டு சிறு சதுரங்களாக நறுக்கவும்.
நறுக்கிய துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

Shakarpara

கீழே படத்தில் இடதுபுறம் இருப்பது கொஞ்சம் மெல்லியதாக நறுக்கப்பட்ட சங்கர்பாலி, வலப்புறம் இருப்பது கொஞ்சம் தடிமனாக நறுக்கியது. இரண்டில் எது நன்றாக இருக்கும் என பார்க்கலாம்னு இப்படி டெஸ்ட் எல்லாம் செஞ்சேன்! ஆனா பாருங்க, ரெண்டுமே சூப்பராதான் இருந்துது! ஹிஹி! :))

Shankarpali
என்னதான் சொல்லுங்க, கோயமுத்தூர்ல இருந்து வாங்கிவந்த அந்த “அது” மாதிரி இந்த “இது” வரலையோன்னு கொஞ்சம் மனக்குறையாத்தான் இருக்குது. அடுத்த முறை செய்கையில் இன்னும் இம்ப்ரூவ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையோடு ஷக்கர்பராவைச் சுத்திச் சுத்திப் படமெடுத்தாச்! ;)

Kalakalaa Maida+Biscuit
என்ஜாய்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button