524341 367966556605256 1023316822 n
தலைமுடி சிகிச்சை

தலைமுடி வளர சில மருத்துவக்குறிப்புகள்

வழுக்கை தலையில் முடிவளர டிப்ஸ்:
சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில்orநல்லேண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தடவி வந்தால் முடிவளரும்.நல்லேண்ணெய் உடலுக்கு குளிர்சியைத்தரும்.

குறிப்பு-காய்ச்சிய பின்னர் கீழாநெல்லி வேரை அதேஎண்ணெயில் போட்டு வைக்க வேண்டும்.அப்போது தான் எண்ணெயின் தன்மை மாறாமல் இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் காய்ச்சியது

நல்லேண்ணெயில் காய்ச்சியது

கீழாநெல்லி

524341 367966556605256 1023316822 n
முடி உதிர்வது மற்றும் நரை போக்க:
1. வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
2. வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.
3. சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே
போதும் இளநரை மாயமாகிவிடும்.
4. சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.
5. கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில்or நல்லேண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி கறுத்து வளரும்.
எளிய மருந்து வழுக்கை நீங்கி முடி வளர …
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
நம்மில் பலர் அடிக்கடி கண்ணாடியை பார்த்து தலையை வாருவதே வழக்கமாக போய்டுது. அதிலும் ஆண்கள் சிலர் சட்டை பையுக்குள்ளேயே சீப்பை வைத்து அடிக்கடி எடுத்து தலையை வாருவார்கள்……..
இதனால் முடி வளருமா? உதிருமா?
தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்
மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்’ தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது.லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்
விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லவில்லை.
தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி “கலரிங்’ செய்வது தான்.
DSC08074
தரமான “ஹேர் டை’ வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், பாதிப்பு தலைமுடிக்குத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தரக்குறைவான “ஹேர் டை’யில், `பாரா பெனிலின் டயாமின்’ என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.
மருதாணி தான் `ஹென்னா’ என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் உள்ள சிவப்பு சாயம் தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது. பாக்கெட் `ஹென்னா’வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் `ஹென்னா’ பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.
அடிக்கடி தலை வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில் பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.
கூந்தல் உதிர பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்தால் கூந்தல் உதிர்வை தடுக்கலாம். இப்போது கூந்தல் அடர்த்தியாக, கருமையாக வளர சில எளிய இயற்கை முறைகளை பார்க்கலாம்.
* வைட்டமின், ‘பி’ குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். நெல்லிக்காயையும், ஊற வைத்த வெந்தயத்தையும் நன்றாக அரைத்து, அந்த விழுதைத் தலையில் பூசி, ஊற வைத்து குளித்தால், உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதுடன், கண் எரிச்சலையும் போக்கும்.
* அழுகின தேங்காயை தூக்கி எறியாமல், அதனுடன், சிறிது சுடுநீர் சேர்த்து அரைத்து, தலையில் தடவி ஊற வைக்கவும். பிறகு நன்றாக, ‘மசாஜ்’ செய்தால், மயிர்க்கால்கள் வலுப்பெறும்.
* இரண்டு ஸ்பூன் வினிகருடன், கடலைமாவைக் குழைத்து, கால் மணி நேரம் ஊறவைக்கவும். இதை, மயிர் கால்களில் படும்படி பூசி, அரைமணி நேரம் கழித்து அலசினால், பொடுகு தொல்லை போய் விடும்.
* தேங்காயை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து, பால் பிழியவும். இதை இரும்பு கடாயில் காய்ச்சினால் எண்ணெய் தனியாக வரும். அந்த எண்ணெயை, தலையில் தடவி ஊறியபின், சீயக்காய் அல்லது கடலை மாவு தேய்த்து அலசவும்.
* நல்ல மரச் சீப்பினால் அழுந்த வாரினால், மயிர்க்கால்களில் ரத்த ஓட்டம் அதிகமாவதோடு, முடி வளர்வதும் தூண்டப்படுகிறது.
* சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயப் பொடி, பயத்த மாவு கலந்து ஊற வைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
* விளக்கெண்ணையை போல உடலுக்கு குளிர்ச்சி தருவது வேறு எதுவும் இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, இலேசாக சுடவைத்து, மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவவும். ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்த சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க முத்தான வழி இது.
* தலை முடிக்கு, போஷாக்குத் தரும் ஷாம்பூவை, வீட்டிலேயே தயாரிக்கலாம். ஒரு பங்கு சீயக்காய், வெந்தயம் கால் பங்கு, பச்சைப் பயறு அரைப் பங்கு, புங்கங்காய் கைப்பிடி அளவு எடுத்து, மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். ரசாயனப் பொருட்கள் இல்லாத இந்தப் பொடி, எந்த வித தீங்கும் ஏற்படுத்தாது.
* பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். இதற்கு, கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்து, பொடி செய்து, பசும்பாலில் குழைத்து, தலையில் தடவி ஊறியபின் குளித்தால், விரைவில் குணம் தெரியும்.
* தேங்காய் எண்ணெய் தடவிக்கொள்ளும் வழக்கம் இருப்பவர்கள், அந்த தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து கலந்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், முடி கறுப்பாக வளரும்.
* வெயிலில் அலைந்து, வேலை செய்வோர், தினமும் உச்சந்தலையில் விளக்கெண்ணெயை தடவி வந்தால், கண்ணுக்குக் குளிர்ச்சி; முடியும் உதிராது.
கூந்தல் பராமரிப்புக்கு செம்பருத்தி தைலம்:
அடர்த்தியான கருகரு கூந்தலுடன் உலாவர ஆசைதான். ஆனால், `முடி செம்பட்டையாக இருக்கிறதே…’ என்று கவலைப்படுகிறவர்களுக்கான பயனுள்ள தகவல் இது…
உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் – 1 டீஸ்பூன், மருதாணி பவுடர் – 1 டீஸ்பூன் வெந்தய பவுடர் – 1 டீஸ்பூன்…. இவற்றை 2 டீஸ்பூன் தேங்காய்ப் பாலில் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் பேக் ஆக போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள்.
இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை செய்தாலே போதும். உங்கள் கருகரு கூந்தலைக் காண்பவர் உள்ளம் அலைபாயும். பேன்களும் பொடுகும் உங்கள் தலையின் நிரந்தரக் குடிமக்களாகி விட்டனவா? அவற்றை விரட்டியடிக்க, இதோ…. ஒரு தேங்காய் வைத்தியம்.
மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை…. இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள். பிறகு, அரை கப் தேங்காய் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள்.
பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகிவிடும். இதைக் தலையில் தடவி, மசாஜ் குளியுங்கள் (சீயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை. வாரம் இருமுறை இந்த சிகிச்சையை செய்து வாருங்களேன். பேனும் பொடுகும் பக்கத்திலேயே நெருங்காது!
• செக்கச் செவேர் செம்பருத்தி பார்க்க மட்டுமல்ல்… பலனிலும் சூப்பர் தான். கூந்தல் பராமரிப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்தது வேறில்லை. மிஸ் கூந்தல் என்ற பட்டத்தை தேடி வரச் செய்யும் அளவுக்கு கருகரு கூந்தல் நீளமாக வளர கலக்கல் தைலம் இது…
செம்பருத்திப்பூவை இடித்து சாறு பிழித்துகொள்ளுங்கள். இந்த சாறுக்குச் சமமாக தேங்காய் எண்ணெய் சேர்த்து, அடுப்பை சிம்மில் வைத்துக் காய்ச்சுங்கள். தேங்காய் எண்ணெய்யின் கொதி வாசனை வருவதற்கு முன்பே இறக்கி விடுங்கள்.
இந்த தைலத்தை தினமும் தேய்த்து வர, முடி வளர்ச்சி தூண்டப்படும் கருகருவென முடி வளரும். தலையில் உள்ள பிசுக்கைப் போக்கவும் இந்தத் தைலம் பயன்படும். இந்த தைலத்தில் சில துளிகள். வைட்டமின் ஈ ஆயில் சில துளிகள்…. இரண்டையும் தனித்தனியே தலையில் தேய்த்து மசாஜ் செய்து, தலையை வாருங்கள்.
ஒரு துணியால் ஆவி ஒத்தடம் கொடுத்து, பிறகு வெறும் தண்ணீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இப்படி செய்து பாருங்கள்… தலையில் உள்ள பிசுக்கு போய் பளபளவெ மின்னும். தலையில் பொடுகும் நரையும் ஏற்பட்டால் கூந்தல் பொலிவில்லாமல் போய்விடும்.
அப்படி நேராமல் கூந்தலைப் பாதுகாக்கிறது இந்த செம்பருத்தி பேக்
செம்பருத்தி இலை – 10, மருதாணி இலை – 20 முழு சீயக்காய் 2… மூன்றையும் நன்றாக அரைத்து, தலையில் தேய்த்து பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒருமுறை இப்படி குளியுங்கள். இதிலுள்ள செம்பருத்தி பொடுகை போக்கி கூந்தலை பளபளப்பாக்கும். மருதாணி இளநரையை போக்கும். சீயக்காய் முடியை சுத்தப்படுத்தும்.
பட்டு போன்ற மென்மையோடு கூந்தல் பளபளக்க உடனடி டிப்ஸ் இதோ…
10 செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கொதிக்கவிடுங்கள். இலை தண்ணீரில் குழைந்துவிடும். பிறகு இலையை எடுத்து விட்டு, இந்தத் தண்ணீரில் சீக்காயைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

முடியை கருமையாக்கும் கறிவேப்பிலை:
நன்றாக முடி வளர ஆரம்பிக்கும் காலம் என்பதே டீன்-ஏஜ் பருவத்தில் தான். அதேபோல்…. அதிகமாக உணவு, சரியான கூந்தல் பராமரிப்பு என்று அக்கறையோடு இல்லாவிட்டால், ஆறடி கூந்தல் கூட அரையடிக்கும் குறைவாக வந்து நின்றுவிடும்.
* கறிவேப்பிலையைத் துவையலாகவோ பொடியாகவோ உணவில் சேர்ப்பதன் மூலம், இரும்புச்சத்து உடலில் சேர்ந்து, முடியை வலுவாக்கும். எந்த உணவில் கறிவேப்பிலை இருந்தாலும், தூக்கி வீசாமல் சாப்பிடுவேன் என்று முதலில் ஒரு சபதம் போடுங்கள்!
* வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும் கருமையாக்கி கண் சிமிட்ட வைத்திடும்.
* முடி உதிர்வதை உடனடியாக கவனிக்காமல் விட்டால்… கடைசியில் தினம் தினம் `திருப்பதி’ போனது போல ஆகிவிடும் தலை! நல்ல முற்றிய தேங்காயின் துருவல் ஒரு கப் எடுத்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். அதை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள். எண்ணெய் தனியாக பிரிந்து வரும். இது தான் கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய். இதைத் தினமும் தலைக்குத் தேய்த்து வந்தால், முடி உதிர்வது நின்று, வளர்ச்சியும் துரிதப்படும்.
* இளவயதில் வரும் முடி கொட்டுதல், வழுக்கை, நரை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க… 100 மில்லி தண்ணீரைக்கொதிக்க வைத்து, அதில் ஒரு கப் மருதாணி இலையைப் போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். 2 நெல்லிக்காய், 2 பூந்திக் கொட்டையை அரைத்து, மருதாணி தண்ணீரில் கலந்து, வாரம் ஒரு முறை தலைக்கு `பேக்’ போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்த ஷாம்பூ அல்லது சீயக்காயினால் அலசுங்கள்.
* வாரத்துக்கு இரண்டு முறை சின்ன வெங்காயம் இரண்டுடன், தேங்காய் துண்டு இரண்டு சேர்த்து அரைத்து வழுக்கையின் மீது பூசுங்கள். பிறகு, கடலை மாவைத் தேய்த்து அலசினால், மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கும்.

Related posts

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள்

nathan

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?

nathan

கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

nathan

இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணா முடி உதிர்வை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்கும் …!

nathan

ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க சூப்பர் டிப்ஸ்!

nathan

உங்களுக்கு மொட்டை மண்டையில கூட கிடு கிடுனு முடி வளர வைக்கணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

தலைமுடியை‌ப் பாதுகா‌க்க

nathan

சோப்பு, ஷாம்பூ பயன்படுத்துபவரா? இதோ உடலுக்குள் உட்புகும் ரசாயனம்

nathan

முடி நுண் பவுடர் / டெக்ஸ்ச‌ர் பவுடரினால் ஏற்படும் 12 அற்புதமான‌ நன்மைகள்

nathan