பேரீச்சை பாதாம் லட்டு

தேவையானவை: பேரீச்சம் பழத்துண்டுகள் – ஒரு கப், பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா – தலா கால் கப், தேன் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். மிக்ஸியில் பேரீச்சம் பழத்துண்டுகள், பாதாம், முந்திரி, பிஸ்தா, தேன் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இந்தக் கலவையை சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.

பலன்கள்: நல்ல கொழுப்பு, புரதச்சத்து இதில் அதிகம் இருக்கின்றன. பேரீச்சை, தேன் சேர்ப்பதால் இரும்புசத்து கிடைத்து, உடலுக்கு நல்ல வலுவைத் தரும். இதனால், பெண்களுக்கு ரத்தசோகை வராது. உடல் வளர்ச்சிக்கு உகந்தது. பெண்கள், தினமும் ஒரு லட்டு சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

Leave a Reply