சைவம்

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

தேவையான பொருட்கள்:

கேரட்டு – 1
குடைமிளகாய் – 1
வெங்காயம் – 1
வெங்காயத்தாள் – 1 பிடி
அஜினோமோட்டோ – 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
நெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன்
பாசுமதி அரிரி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, காய்கறிகள், வெங்காயம், அஜினோமோட்டோ, வெள்ளை மிளகுத்தூள், உப்பு கலந்து மூடி, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். காய்கறிகள் வெந்ததும் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் சுத்தம் செய்த பாசுமதி அரிசியைப் போட்டு, 300 மி.லி. தண்ணீரை ஊற்றி மூடி, 5 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். சாதம் வெந்ததும், வெந்த காய்கறிகளை சாதத்தில் கலந்து 2 நிமிடங்கள் மீடியம் ஹையில் மூடியைத் திறந்து வைத்து குக் செய்யவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள் வைத்து, சுவையான சைனீன் ஃபிரைடு ரைஸை சுவைக்கலாம்.
chinese fried rice

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button