சிம்பிளான புடலங்காய் பொரியல்

மதியம் என்ன பொரியல் செய்வதென்றே தெரியவில்லையா? அப்படியெனில் வீட்டில் புடலங்காய் இருந்தால், அதனைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிடுங்கள். அதிலும் புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று தெரியலையா? ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை புடலங்காய் பொரியலை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுத்துள்ளது.

மேலும் இந்த புடலங்காய் பொரியலானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும். சரி, இப்போது அந்த புடலங்காய் பொரியலின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
புடலங்காய் – 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
சாம்பார் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான பொருட்கள்

தாளிப்பதற்கு.
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிது

செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்னர் அதில் புடலங்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 5-10 நிமிடம் நன்கு வேக வைத்து, மூடியை திறந்து, தீயை அதிகரித்து 5 நிமிடம் வதக்கி இறக்கினால், புடலங்காய் பொரியல் ரெடி!

Leave a Reply