மருத்துவ குறிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…35 வது வாரத்தில் குழந்தை பிறந்தால் ஆரோக்கியத்திற்கு ஆபத்து !!!

கர்ப்பம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மிகவும் உற்சாகமான காலங்களில் ஒன்றாகும். இருப்பினும், கர்ப்ப காலத்தில் கூட நீங்கள் எதிர்பாராத விபத்தால் பாதிக்கப்படலாம்.

முன்கூட்டிய பிறப்பு என்பது கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான விஷயங்களில் ஒன்றாகும். பொதுவாக, ஒரு முழு கர்ப்ப காலம் 40 வாரங்கள் வரை நீடிக்கும்.

37 வாரங்களுக்கு முந்தைய அனைத்து பிறப்புகளும் குறைப்பிரசவமாக கருதப்படுகின்றன. முன்கூட்டிய குழந்தைகள் பிறக்கும் போதும் அதற்கு பிறகும் பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம் என்று பல ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர்.

35 வாரங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகளுக்கு பல குறுகிய கால மற்றும் நீண்டகால சிக்கல்கள் இருக்கலாம். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் பொருந்தும்.

இவைகள் போக, குறைமாத பிரசவ அனுபவம் ஏற்படும் போது, தாய்க்கு உணர்ச்சி ரீதியான அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

குறைப்பிரசவத்தைப் பொறுத்தவரை, குழந்தை மற்றும் தாய்க்கு உடனடி மருத்துவ சேவையை வழங்குவது மிகவும் முக்கியம்.

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைந்தபட்ச மருத்துவ தலையீட்டுடன் உயிர் வாழ்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.

 

அறுவைசிகிச்சை பிரசவம்

 

நஞ்சுக்கொடி சீர்குலைவு அல்லது உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் இருந்தால் குறைப்பிரசவம் ஏற்படலாம். சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சை முறையை மருத்துவர்கள் விரும்புகிறார்கள். 35-வது வாரத்தில், கருவில் உள்ள சிசு சுகப்பிரசவத்திற்கு தயாராக இருக்காது. 35-வது வாரத்தில் குழந்தையைப் பிரசவிப்பதால் ஏற்படும் உடல்நல ஆபத்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

 

சுவாச கோளாறுகள்

 

கர்ப்பத்தின் பிற்பகுதியில் மட்டுமே நுரையீரல் முழுமையாக உருவாகிறது. இதன் விளைவாக, 35 வாரங்களுக்கு முன்பு பிறந்த குழந்தைகள் பலவிதமான சுவாச நோய்களால் பாதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில், குறைமாத பிரசவம் முன்னதாகவே திட்டமிடப்பட்டிருந்தால்,, நுரையீரல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.

 

 மஞ்சள் காமாலை

 

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளிடம் பொதுவாக காணப்படும் மற்றொரு பொதுவான அறிகுறி தான் உடலியல் மஞ்சள் காமாலை. இதற்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவை. சரியான மருத்துவ சிகிச்சையின் மூலம் இதனை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து விடலாம். குழந்தையை 35 வாரத்திற்கு முன்பாகவே பெற்றெடுப்பதில் ஏற்படும் உடல்நல அபாயங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

இருதய நோய்

நிலைத்த நாளத் தமனி (Patent Ductus Arteriosus) மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்ற சில நிலைகள் உள்ளது. சரியான நேரத்தில் சரியான சிகிச்சையை அளித்து வந்தால், பொதுவாக இத்தகைய இதய பிரச்சனைகள் தானாக சரியாகிவிடும். சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்றால், இதயம் மூலமாக அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு ஏற்படும். இதனால் பின்னாட்களில் இதய செயலிழப்பு ஏற்படும்.

 

மூளை பிரச்சினைகள்

 

முன்கூட்டிய குழந்தைகளுக்கு இன்ட்ராவென்ட்ரிகுலர் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பு அதிகம். இது பொதுவாக தானாக சரி செய்யப்படுகிறது. இருப்பினும், அத்தகைய சூழலில், உடனடியாக ஒரு மருத்துவரை சந்திப்பது மிகவும் முக்கியம். நீங்கள் 35 வாரங்களுக்குள் பெற்றெடுத்தால் இது மிக முக்கியமான உடல்நல அபாயங்களில் ஒன்றாகும்.

 

வெப்பநிலை கட்டுப்பாட்டு பிரச்சனைகள்

 

முன்கூட்டிய குழந்தைகள் 35 வாரங்களுக்குள் பிறக்கின்றன, எனவே உடலில் கொழுப்பு குவிப்பு குறைவாக உள்ளது. அவர்களின் உடல் வெப்பநிலை மிக விரைவாக குறையும். இந்த தாழ்வெப்பநிலை சுவாச பிரச்சினைகள் மற்றும் இரத்தச் சர்க்கரைக் குறைவையும் ஏற்படுத்தும். 35 வாரங்களுக்குள் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் அபாயங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

தொற்றுக்கள்

 

குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதிராத நோய் எதிர்ப்பு அமைப்பு இருக்கக்கூடும். அதனால் அவர்களுக்கு எளிதில் தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால், மிதமாக இருக்கும் தொற்று, சீழ்ப்பிடிப்பு ஏற்படும் அளவிற்கு மோசமான நிலையை அடையும். 35 வாரங்களுக்கு முன்பாகவே குழந்தைப் பிறப்பதல் ஏற்படும் ஆபத்துக்களில் இதுவும் ஒன்றாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button