மருத்துவ குறிப்பு

தெரிஞ்சிக்கங்க…நுரையீரலில் தங்கியிருக்கும் நாள்பட்ட சளியை வெளியேற்றணுமா?

கொரோனா முதல் எந்த வைரசாக இருந்தாலும் முதலில் பாதிப்பை ஏற்படுத்துவது நுரையீரலில் தான், நுரையீரலில் பாதிப்படைந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

 

எனவே நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம், சளி நம்முடைய உடலுக்கு தேவையான ஒன்று தான் என்றாலும், அதிகப்படியான சளி, நாள்பட்ட சளியால் வேறு சில நோய்கள் நம்மை அண்டிவிடும்.

 

எனவே இயற்கையான முறையில் சளியை வெளியேற்ற வேண்டுமே தவிர, மருந்து, மாத்திரைகள் மூலம் நம் உடலிலேயே தங்கவைத்துவிடக்கூடாது.

 

இந்த பதிவில் நாள்பட்ட சளியை நீக்கும் இயற்கை வைத்திய முறை பற்றி தெரிந்து கொள்வோம்.

 

செய்முறை

முதலில் ஒரு சிறிய உரலை எடுத்து கொள்ளவும், அதில் இருபது போல மிளகு சேர்த்து கொள்ளவும், இது கூட ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து கொள்ளுங்கள்.

 

மிளகு நன்கு பொடி செய்து இஞ்சியையும் நசுக்கி கொள்ளவும். பிறகு வேறொரு பாத்திரத்தில் 1/4 தேக்கரண்டி அளவு திப்பிலி தூள் போடவும்.

 

அதே பாத்திரத்தில் நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த இஞ்சி மற்றும் மிளகினை சேர்த்து கொள்ளலாம்.

 

பிறகு இருபது துளிசி இலைகளையும் இதனோடு சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து இரண்டு கருப்பு வெற்றிலை எடுத்து கொள்ளலாம்.

 

இப்போது 300 ml அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். கூடவே சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டிக்கும் குறைவாக சேர்த்து கொள்ளவும்.

 

இந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் பத்து நிமிடங்கள் கொதிக்க வேண்டும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும்வரை காத்திருக்கலாம்.

 

பிறகு ஒரு டம்ளரில் அதனை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள், இது காரமாக இருப்பதால் பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.

 

இதனை மிதமான சூட்டில் இருக்கும் போது எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

 

யார் எவ்வளவு குடிக்க வேண்டும்?

பெரியவர்கள் இதனை 25 – 30 ml அளவு வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள் கூட எடுத்து கொள்ளலாம்.

 

குழந்தைகளுக்கு இதனை 5ml வீதம் மட்டுமே கொடுக்க வேண்டும், பத்து வயது சிறுவர்களுக்கு 10ml அளவில் கொடுங்கள்.

 

வெறும் வயிற்றில் தான் எடுத்து கொள்ள வேண்டும் என்ற விதி இதற்கு கிடையாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button