அலங்காரம்மேக்கப்

மேக் அப்/ஒப்பனைகளை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:

பெண்கள் எப்போதுமே தங்கள் அழகை பேண விரும்புவார்கள், அதிலும் மேக் அப்பை பற்றி கேட்கவே வேண்டாம். பெண்களிடம் அவர்களின் விலைமதிப்பற்ற (காலாவதியானது) காஸ்மெட்டிக்கை எறியுங்கள் இல்லையெனில் நீங்கள் அருவருக்கத்தக்க தோற்ற‌த்தையே பெற நேரிடும் என்று கூறுங்கள். ஆனால் பல பெண்களுக்கு, பல ஆண்டுகளாக வைத்து உபயோகிக்கும் ஒப்பனை பொருட்களால், ஏற்படும் தீங்குகள் பற்றி தெரிவதில்லை.

அழகு நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் குறைந்த பட்சம் ஒரு ஆண்டுக்கு ஒரு முறையாவது ஒப்பனை பொருட்களை மாற்ற வேண்டும் அல்லது அவற்றின் பயன்பாடு தேதி முடிவடையும் முன்பே உபயோகித்து முடித்து விட வேண்டும் என்று கூறுகிறார்கள். என்வே பயன்பாடு தேதி முடிவடைந்த பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பது உங்களின் தோலுக்கு நீங்கள் செய்யும் மகத்தான உதவி என்பதில் ஐயமேதுமில்லை.62323159a7
மஸ்காரா, ஐ லைனர், கண்மை/காஜல் போன்ற பொருட்களை நீங்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாற்ற வேண்டும் ஏனெனில் நீங்கள் மஸ்காரவை உபயோகித்த பின் அதிலேயே வைத்து மூடி விடுவதால் பாக்டீரியாக்கள் அதிலேயெ தங்கி விடுகின்றன. காரணம் மஸ்காரா இன்னும் முடியாததினால் தான், மேலும் நீங்கள் இதை அடிக்கடியும் உபயோகப்படுத்துவதில்லை. உங்கள் கண்களுக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், செலவை எண்ணி பார்க்காது கண்ணுக்கு உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவ்வப்போது மாற்றுங்கள்.

ஆனால் ஒப்பனைக்கு பயன்படும் ஸ்பான்ஜ்கள், மற்றும் கண்களுக்கான‌ மேக் அப் தூரிகைகள் எல்லாம் மொத்தமாக கிடைக்கின்ற பொருட்கள் – எனவே நீங்கள் இவைகளை ஒரு முறை ஒரு ஜோடியை பயன்படுத்திய பின் அதை தூக்கி எறிந்து விடுங்கள். ஒப்பனைக்கு பயன்படும் ஸ்பான்ஜ்களை மறுபடி மறுபடி பயன்படுத்தாதீர்கள் – இதனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் முகத்தில் கிருமிகள்தான் சேரும்.
திரவ நிலையில் உள்ள உங்கள் பவுண்டேஷனை ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் வைத்திருந்து பயன்படுத்துங்கள். இதை ஒரு குளிர்ந்த இடத்தில் வைத்து பயன்படுத்துவதோடு, எப்போதும் உங்கள் விரல்களை பயன்படுத்தாமல் – ஒரு பஞ்சு அல்லது தூரிகையை கொண்டு பயன்படுத்துங்கள்.
லிப் க்ளாஸ் மற்றும் உதட்டுச்சாயங்கள் இவற்றை பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனால் அதை தூர எறிந்து விடுங்கள்.இதே போல் காம்பாக்ட் பவுடரையும் 2 மாதத்திற்குள் முடித்து விடுங்கள், இல்லையெனில் உங்கள் பவுடரின் நிறம் மாறிவிடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button