முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சருமத்திற்கு அழகு தரும் மஞ்சள் தூள் பேஸ் பேக்

தற்போது எண்ணிலடங்கா செயற்கை பூச்சு கிரீம்கள் விற்பனைக்கு வருகிறது. ஆனாலும் பெண்கள் வயது பேதமில்லாமல் முதத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

நமது முன்னோர்கள் காலத்தில் பெண்கள் மஞ்சள் பூசி குளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். முகம், கை, கால்கள் என கஸ்தூரி மஞ்சள் தூளைக் குழைத்து பூசி குளிப்பார்கள். இதனால் சருமம் பொலிவு பெறும். முகத்தில் பருக்கள், கரும் புள்ளிகள்போன்றவை ஏற்படாது. இயற்கை அழகோடு மஞ்சள் அழகும் இணைந்து பெண்கள் ஆரோக்கிய அழகை பெற்றிருந்தார்கள்.

தற்போது எண்ணிலடங்கா செயற்கை பூச்சு கிரீம்கள் விற்பனைக்கு வருகிறது. ஆனாலும் பெண்கள் வயது பேதமில்லாமல் முதத்தில் பரு, கரும்புள்ளி, ஹார்மோன் மாற்றங்களால் இலேசான மீசை முடி என்று அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். மஞ்சளை உபயோகப்படுத்தினால் குறைந்த நாட்களில் பயன்பாடு தெரியும். கஸ்தூரி மஞ்சளை குளியல் பொடியுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.

மாதவிடாய்க் காலங்களுக்கு முன் சிலருக்கு முகத்தில் சிறு சிறு பருக்கள் அல்லது கட்டிகள் உருவாகக் கூடும்.பகல் நேரங்களில் இல்லையென்றாலும் இரவு நேரங்களில் மஞ்சளைக் குழைத்து பூசி வந்தால் பருக்கள் வருவது தடைபடும்.

அம்மை, தழும்பு, கரும்புள்ளி போன்றவை மறைய மஞ்சளுடன் சோற்றுக்கற்றாழை நுங்கை (ஜெல்லை) குழைத்து அந்த இடத்தில் பூசி வந்தால் நாளடைவில் அவை மறைந்து சருமம் இயல்பாகும்.

சேற்றுப்புண், பாத எரிச்சல், பாத வெடிப்பு போன்றவை இருந்தால் சுத்தமான தேங்காய் எண்ணெயில் மஞ்சளைக் குழைத்து காலில் பூசலாம். பாத வெடிப்புகள் நீங்கி பாதம் அழகாகும்.

சரும சுருக்கத்தைத் தடுத்து சருமத்தைப் பாதுகாக்கும் மஞ்சள், எண்ணெய் வழிந்த முகத்தைக் கொண்டிருக்கும் பெண்க ளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். விலை மதிப்புள்ள க்ரீம்கள் செய்யவேண்டிய வேலையைப் பால், தேன் உடன் கலந்து பூசும் மஞ்சள் எளிதாக செய்து விடுகிறது.

தினமும் முகத்திற்கு மஞ்சளுடன் சிறிது கடலை மாவு மற்றும் பால் ஆடை சேர்த்து தடவி வந்தால் முகம் பள பளப்பதோடு முகத்தில் கருமை மற்றும் காயங்கள் நீங்கிவிடும்.

மஞ்சளை சிறிது எலும்பிச்சை சாறில் தேய்த்து முகத்தில் பருக்கள் உண்டாகும் இடத்தில் தடவினால் ஆரம்பத்திலேயே பருக்கள் உண்டாவதாகி தடுக்கலாம்.
மஞ்சளுடன் சிறிது வேப்பிலை (Neem) அரைத்து தேய்த்தால் அம்மையால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.

-maalaimalar-

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button