வாழைக்காய் பொரியல்

செ.தே.பொருட்கள் :-

வாழைக்காய் – 2
எண்ணெய் – பொரிப்பதற்கு
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி ( விரும்பினால்)

செய்முறை :

* வாழைக்காயை கழுவி, தோல் சீவி சிறிய சிறிய வில்லைகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
* அதனுள் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் போட்டு நன்றாக கலந்து 5 நிமிடம் ஊறவிடவும்.
* எண்ணெய்யை கொதிக்கவிட்டு, கொதித்ததும் ஒவ்வொரு வில்லைகளாக எடுத்துப் போடவும்.. இடையிடையே பிரட்டி விடவும்.
* செம்மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கும் போது வடித்து எடுத்துக்கொள்ளவும்.
** சோறு, புட்டு, இடியப்பத்துடன் பரிமாறலாம்…..( தேநீருடனும் )…. ம்ம்ம்ம்….ம்ம்

Leave a Reply