சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்! சமையலில் கலக்க…

சமையலில் கலக்க…

* ரவா தோசைக்கு மாவை அதிக நேரம் ஊறவைக்கக் கூடாது. ஊறினால் தோசை மொறு மொறுப்பாக வராது. வெங்காயத்தை பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து தோசை சுட்டால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

* பூரி மாவு பிசைந்து அதிக நேரம் வைத்திருந்து பொரித்தால் அதிக எண்ணெய் உறிஞ்சும். அதனால் மாவு பிசைந்த சிறிது நேரத்தில் பூரி சுட்டு விட வேண்டும்.
gtdfryhrf
* பூரி மாவு பிசையும்போது ரவைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் பூரி மொறுமொறுப்பாக வரும்.

* கோதுமை மாவு பிசைந்ததும் புரோட்டா மாவு அடிப்பதுபோல் கொஞ்சம் அடித்து வைத்தால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

* மாவை இரவில் பிசைந்து குளிர்சாதனப் பெட்டியில் (பிரிட்ஜ்) வைத்து காலையில் சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button