சரும பராமரிப்பு

சருமத்தில் ரோமமா? நீக்கலாம். தடுக்கலாம்!

நடை, உடை, பாவனை, சிந்தனை, செயல் என எல்லாவற்றிலும் ஆண்களைப் போல இருக்க நினைக்கிற பெண்களும் ஒரு விஷயத் தில் அதை வெறுக்கவே செய்கிறார்கள். அது ஆண்களைப் போல சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்கள்! பெண்மைக்குப் பெரிய சவாலான இந்தப் பிரச்னைக்கு, வாக்சிங், திரெடிங், இன்ஸ்டன்ட் கிரீம், லேசர் என எத்தனையோ சிகிச்சைகள் உண்டு அழ குத் துறையில். அத்தனையும் பாதுகாப்பானவையா என்பதுதான் கேள்வியே. சருமத்தில் வளரும் தேவையற்ற ரோமங்களை நீக்க வும், வளர்ச்சியைத் தடுக்கவும் இயற்கை அழகு சிகிச்சையில் ஏகப்பட்ட வழிகள் உள்ளன என்கிறார் அழகியல் நிபுணர் ராஜம் முரளி.

”பூப்பெய்தும் வயதில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கிற பிரச்னைதான் இது. ஹார்மோன்களின் இயக்கம் சீராக இல்லாமல் போவதே முக்கிய காரணம். உணவுப் பழக்கம், இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறை, பிசிஓடி எனப்படுகிற மருத்துவப் பிரச்னை என வேறு காரணங்களும் இதன் பின்னணியில் உண்டு. இள வயதிலிருந்தே சற்று எச்சரிக்கையாக இருந்தால், ஆரம்பத்திலேயே இந் தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்” என்கிற ராஜம், அதற்கான வழிகளையும் காட்டுகிறார்.

பியூமிஸ் ஸ்டோன் எனக் கடைகளில் கிடைக்கும். அதை வாங்கவும். சந்தனக் கல்லில் சந்தனத்தை இழைத்து அந்த பியூமிஸ் ஸ்டோ னில் தடவி வைக்கவும். ரோமங்களை நீக்க வேண்டிய பகுதியை முதலில் நன்கு கழுவித் துடைக்கவும். கடலை மாவு, பார்லி பவு டர், தேன் மூன்றும் தலா 1 டீஸ்பூன் அளவு எடுத்து, சில துளிகள் தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் குழைத்து, ரோமம் நீக்க வேண் டிய சருமப் பகுதியில் திக்காக தடவவும். அரை மணி நேரம் ஊற விட்டு, அது காய ஆரம்பித்ததும், தண்ணீரைத் தெளித்து, சந்த னம் தடவி வைத்த பியூமிஸ் ஸ்டோனால், மிக மென்மையாக ரோமத்தின் எதிர் திசையில் தேய்க்கவும். பிறகு அந்த இடத்தைக் கழுவ வும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்தால் முடி வளர்ச்சியின் வேகம் குறைந்து, வேர்க்கால்கள் பலவீனமடையும்.

விரளி மஞ்சள், வசம்பு, கோரைக் கிழங்கு, குப்பைமேனியை நன்கு காய வைத்து, சம அளவு எடுத்துக் கலந்து, நீர் விட்டு பேஸ்ட் போலச் செய்து, உடல் முழுக்கத் தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டு, எதிர் திசையில் தேய்த்துக் குளிக்கவும். எரிச்சலாக உணர்ந்தால் குளிர்ந்த பாலோ, தயிரோ, தேங்காய் எண்ணெயோ தடவிக் குளிக்கலாம்.

பெண் குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே சருமத்தில் நிறைய ரோமங்கள் இருப்பதைப் பார்க்கலாம். கோதுமை மாவில் 2 டீஸ்பூன் வெல்லத் தண்ணீர் கலந்து, பேக் மாதிரி செய்து, குழந்தைகளின் முதுகில் தடவி, காய்ந்ததும், மென்மையாக உரித்தெடுத்து விடலாம். தொடர்ந்து இப்படிச் செய்தால், பெண் குழந்தைகள் பருவமடையும் போது, ரோமப் பிரச்னை தீவிரமாகாமலிருக்கும்.

சம்பா கோதுமை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், வெட்டிவேர் தூள், நித்யமல்லிச் செடியின் வேரைக் காய வைத்து அரைத்த தூள் எல்லாம் சம அளவு கலந்து கொள்ளவும். தினமும் குளிக்கும் போது, மஞ்சள் மாதிரி இந்தக் கலவையை உடலில் தேய்த்துக் குளித் தால் ரோம வளர்ச்சி கட்டுப்படும்.

செய்யக்கூடாதவை.

சருமத்தில் தேவையற்ற ரோம வளர்ச்சி இருந்தால் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் மாதவிலக்கு சுழற்சிதான். அது சரியில்லாம லிருப்பது உடலில் ஹார்மோன் கோளாறு இருப்பதற்கான அறிகுறி. எனவே அதற்கே முதல் சிகிச்சை.

கத்தரிக்கோல், ரேசர் போன்ற எந்தக் கருவியையும் உபயோகித்து ரோமங்களை நீக்க முயற்சிக்க வேண்டாம். அப்படிச் செய்தால், ரோமங்களை நீக்கிய இடம், தடித்து, கருப்பதுடன், ரோம வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும். கெமிக்கல் கலந்த ஹேர் ரிமூவிங் கிரீம்களை உபயோகிப்பதும் ரோம வளர்ச்சியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.

ஏற்கனவே கிரீம் மாதிரியானவற்றைக் கொண்டு ரோமங்களை நீக்கியவர்களுக்கு சருமத்தின் சில இடங்களில் கரும்புள்ளிகள் மாதிரி நின்று விடும். அந்த இடங்களை அப்படியே வறண்டு போகவிடாமல், வாரம் ஒரு முறை உச்சி முதல் பாதம் வரை எண்ணெய் வை த்து, ஊறிக் குளிப்பது மூலம் ஓரளவு நிவாரணம் காணலாம்.

பிளீச்சிங் செய்வதால் சருமத்தின் மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் ரோம வளர்ச்சி அத்தனை அசிங்கமாகத் தெரியாமல் தற்காலிகமாக மறைக்கப்படும். ஆனால், பிளீச்சின் தீவிரம் குறையக் குறைய, அதாவது, நான்கைந்து நாள்களில் மறுபடி ரோமங்கள் தம் பழைய நிறத்துக்குத் திரும்பும். கெமிக்கல் கலந்த கிரீம் கொண்டு அடிக்கடி பிளீச் செய்வது சருமத்துக்கும் கேடு.
hair removal tips11 300x201

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button