ஆரோக்கியம் குறிப்புகள்

சுயிங்கம் மென்றால்?

சுயிங்கம் மெல்வது செரிமானத்துக்கும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக சாப்பிட்டதற்குப் பிறகு சுயிங்கம் மெல்வது மிகவும் நல்லது. இப்படிச் செய்யும்போது அதிக அளவில் எச்சில் சுரக்கப்பட்டு இரைப்பைக்குள் அனுப்பப்படுகிறது. இது வயிற்றில் உள்ள அமிலங்களைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், புளித்த ஏப்பம் பிரச்னை உள்ளவர்கள், இதனை மெல்லும்போது உருவாகும் உமிழ் நீர், அமில – காரத்தன்மையைச் சீர்செய்கிறது.

உணவு உண்ட பின் இதனை மெல்லுவதன் மூலம், பல் இடுக்குகளில் உள்ள உணவுத் துகள்கள் வெளியேற்றப்படும். இதனால், உணவுக்குப் பின் பல் தேய்ப்பது, மவுத் வாஷ் உபயோகிப்பது போன்றவற்றுக்கு அவசியமே இருக்காது. இது பல் மற்றும் தாடைகளுக்கு நல்லதொரு பயிற்சியாகவும் அமைகிறது.

‘சர்க்கரைகொண்டு தயாரிக்கப்படும் சுயிங்கம்களை தொடர்ந்து மெல்லுவதன் மூலம், பற்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. காரணம், அதில் உள்ள சர்க்கரை, பல் இடுக்குகளில் படிந்துள்ள பாக்டீரியாக்களுக்கு உணவாகிவிடுவதால், அவை வேகமாக வளர்ந்து பற்களைச் சிதைக்கும். இதனால் சிறுவர்கள், சிறுவயதிலேயே பல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு ஆளாகலாம்.

மற்றொரு பிரச்னை, சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிடுவது. சுயிங்கம்மை விழுங்கினாலும் பாதிப்புகள் பெரிய அளவில் இருக்காது. காரணம், இது உடலுக்குள் எங்கும் ஒட்டாமல் நமது குடலை அடைந்துவிட்டால், மிக எளிதாக மலத்தில் வெளியேறிவிடும். மாறாக இது உணவுக்குழாயில் ஒட்டிக்கொள்ளும்போதுதான், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். சுயிங்கம்மைத் தெரியாமல் விழுங்கிவிட்டால், உடனடியாக அதிகப்படியான நீர் அருந்த வேண்டும். இது, சூவிங்கம் குடலை அடைந்து வெளியேறி விடுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. இல்லையெனில் அறுவைசிகிச்சை மூலமே வெளியேற்ற இயலும்.

சுயிங்கம் பிரியர்கள் சுகர் ஃப்ரீ சுயிங்கம் மெல்லுவதால், முகத்துக்கும் நல்ல பயிற்சியாக இருக்கும்.’
201508221124076157 Cuyinkam Issues SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button