ஆரோக்கியம் குறிப்புகள்

அதிகமாக வியர்ப்பது ரொம்ப நல்லது

சிலருக்கு அதிக அளவில் வியர்க்கும். இப்படி வியர்ப்பதால், பலர் அந்த வியர்வையைக் கட்டுப்படுத்த நிறைய முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் வியர்வை அதிகம் வந்தால், உடல் பருமனானது குறையும். அதுமட்டுமின்றி, வியர்வை வெளியேறுவதன் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.

ஆகவே அதிகம் வியர்த்தால், எப்போதும் காற்றாடிக்கு அருகிலேயே உட்காராமல் சற்று வியர்க்கவும் வழிவிடுங்கள். அதே சமயம் தண்ணீர் அதிகம் குடிக்கும் பழக்கத்தையும் கொள்ளுங்கள். ஏனெனில் வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நீர்ச்சத்தானது குறைந்துவிடும். வியர்வை அதிகம் வெளியேறினால், உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது ஊக்குவிக்கப்படும்.

அதனால் தான் காய்ச்சலின் போது வியர்த்தால், காய்ச்சலானது குணமாகிவிடுகிறது. உடற்பயிற்சியின் போது வெளிவரும் வியர்வையானது இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. அதிலும் வாக்கிங் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சி செய்தால், இதயமானது வேகமாக இரத்தத்தை அழுத்துவதால், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருந்து, உடலின் மெட்டபாலிசமானது அதிகரித்து, உடல் எடை குறைய வழிவகுக்கிறது.

வியர்க்கும் போது சருமத்துளைகளானது விரிவடைந்து, அதன் வழியே வியர்வை வெளியேறுவதால், சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தை பொலிவாகவும், மென்மையாகவும் மாற்றுகிறது. உடற்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், சிறுநீரகமானது சீராக செயல்பட்டு, சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதற்கு உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், அதிக அளவில் தண்ணீர் மற்றும் இதர பானங்களான இளநீரை குடிக்க தோன்றுவதே காரணமாகும். இதனால் தான் சிறுநீரகத்தில் நச்சுக்கள் தங்காமல் வெளியேறிவிடுகிறதாம்.
c62bd7ad f38b 4c51 9db5 3c4cd6ff6d96 S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button