சட்னி வகைகள்

கேரட் – வெந்தயக்கீரை சட்னி

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 6 பல்
பச்சை மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய கேரட் – 2 கப்
வெந்தயக்கீரை – 1 கப்

தாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி,
கடுகு – 1 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி,
கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம்

தயாரிப்பு முறை:

• ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து வறுக்கவும். பருப்பு பிரவுன் கலர் வந்ததும் தட்டில் கொட்டி ஆற விடவும்.

• அதே கடாயில் எண்ணெய் ஒரு தேக்கரண்டி சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய கேரட் சேர்த்து கேரட் பச்சை வாசனை போகும் வரை (4 முதல் 5 நிமிடங்கள்) வதக்க வேண்டும். கேரட்டின் நிறம் மாற கூடாது. பிறகு அதை தட்டி கொட்டி ஆற விடவும்.

• மறுபடியும் கடாயில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் வெந்தயக்கீரையை போட்டு 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதை தட்டில் கொட்டி குளிர விடவும்.

• அனைத்தும் ஆறியதும் மிக்சியில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம் போட்டு நன்றாக அரைந்த பின்னர் கேரட், வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

• கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து கேரட் சட்னியில் கொட்டவும்.

• சுவையான சத்தான கேரட் – வெந்தயக்கீரை சட்னி ரெடி.

• இந்த சட்னி சாம்பார் சாதம் அல்லது ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
219c7b12 e6ca 4710 a10d 4453c9e9822f S secvpf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button