அழகு குறிப்புகள்

அழகு சாதனப் பொருள் வாங்கும் போது கவனமா இருங்க!!

பணத்தைக் கொடுத்து விஷத்தை தான் நாம் பெரும்பாலும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். எப்போதுமே நாம் வாங்கும் பொருள்களில் என்னென்ன மூலப் பொருள்கள் கலந்துள்ளன, அதன் மூலம் என்னென்ன பயன் இருக்கிறது, என்ன விளைவுகள் ஏற்படும் என்று நாம் தெரிந்துக் கொள்வதே இல்லை.

 

பெரும்பாலும் இரசாயன மூலப் பொருள்களின் கலவையால் தான் நீங்கள் வாங்கும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. அனைத்து மூலப் பொருள்களும் தீங்கானவை இல்லை, ஆனால், சில மூலப் பொருள்கள் உங்கள் உடலுக்கும், ஆரோக்கியத்திற்கும் பல எதிர்வினை விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

 

எனவே, எந்த ஒரு அழகு சாதனப் பொருளோ அல்லது சருமப் பராமரிப்புப் பொருளோ வாங்கும் போது இந்த கேள்விகளை கேட்க மறக்க வேண்டாம்…

நிலையானதா

இது மிகவும் முக்கியமான ஒன்று, நீங்கள் வாங்கும் சருமப் பராமரிப்பு பொருளில் உள்ள மூலப் பொருட்கள் நிலையானதா என்று கேட்டு வாங்குங்கள், நல்ல ரிசல்ட் காண்பிக்க வேண்டும் என்று அதிக ஆற்றல் மிக்க மூலப் பொருளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அது நிலையாக இருக்காது, நீங்கள் அதை பயன்படுத்தி வெயிலில் அல்லது அதிக விளக்கின் ஒளி வெளிப்படும் இடங்களுக்கு போகும் போது பாதிப்புகள் ஏற்படும்.

 

தன்மை

நீங்கள் வாங்கும் சருமப் பராமரிப்புப் பொருளின் தன்மை மற்றும் காலாவதி காலத்தை பார்த்து வாங்குங்கள். காலாவதி ஆகும் ஒரு சில மாதங்கள் மட்டுமே இருப்பின் அந்த பொருளை வாங்க வேண்டாம். ஏனெனில், அதன் தன்மையில் குறைவு ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

 

மூலப் பொருள்கள்

அட்டையில் குறிப்பிடபட்டிருக்கும் மூலப் பொருள்களின் பட்டியிலை பாருங்கள் பெரும்பாலும், ரெட்டினால், வைட்டமின் சி, AHAs, போன்ற குறிப்புகள் தான் இருக்கும். எனவே, அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மூலப்பொருள்கள் பற்றி தெரிந்துக் கொண்டு, அந்த மூலப் பொருள்கள் உங்கள் சருமத்திற்கு ஒத்துப்போகுமா என்று சரும மருத்துவரிடம் ஆலோசித்த பின் பயன்படுத்தத் துவங்குங்கள். அனைத்து மூலப் பொருள்களும் அனைவரது சருமத்திற்கும் ஒத்து வராது.

 

வேதியல் பார்முலா

நீங்கள் பயன்ப்படுத்தப் போகும் சருமப் பராமரிப்பு அல்லது அழகு சாதனப் பொருள்கள் எந்த வேதியல் பார்முலாவில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டவர் இதில் எல்லாம் தான் முக்கியத்துவம் காட்டுகின்றனர். ஆனால், நாம் வெறும் விளம்பரத்தைப் பார்த்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் ஏமார்ந்துக் கொண்டிருக்கிறோம்.

நிறுவனம்

ஒரு சில நிறுவனங்கள் தான் R&D எனப்படும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (Research and Development) எனும் துறையை ஒதுக்கிப் பரிசோதனை செய்து பொருட்களை தயாரிக்கின்றனர். எனவே, நிறுவனம் பற்றியும் தெரிந்து வாங்க வேண்டியது அவசியம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button