முதுகு வலியை போக்கும் பயிற்சி

முதுகு வலி அதிகம் பெண்களையே தாக்குகிறது. முதுகு வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கீழே சொல்லப்பட்டுள்ள இந்த எளிய உடற்பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் முதுகு வலி பிரச்சனை இருக்காது.

மேலும் தினமும் தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். சிசேரியம் செய்த பெண்களுக்கு முதுகு வலி இருக்கும். இவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சியை தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. பயிற்சி

செய்முறை : முதலில் விரிப்பில் நேராக கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை தோள்பட்டைக்கு இணையாக நீட்டவும். இப்போது கால்களை முட்டி வரை மடக்கவும். பின்னர் கால்களை மட்டும் வலது பக்கமாக தரையில் படும்படி சாய்க்கவும் (படத்தில் உள்ளபடி). இந்த நிலையில் கைகளையோ, உடலையோ திருப்பக்கூடாது.

இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கால்களை மாற்றி இடது பக்கமாக செய்யவும். ஆரம்பத்தில் கால்கள் தரையை தொடுவது கஷ்டமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் படத்தில் உள்ளது போல் செய்ய வரும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முறை செய்யலாம். இந்த பயிற்சியை காலையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply