அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகம் பளபளப்பாக எளிய அழகுக் குறிப்புகள்!

 உருளைக்கிழங்கு சாற்றுடன் சமஅளவு தேன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவ முகம் பளிச்சென இருக்கும்.

 இளஞ்சூடான பாலுடன் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி பத்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளப்பாகும்.

 நன்கு பழுத்த பப்பாளி பழத்தின் சாறை முகத்தில் தேய்த்தால் வடுக்கள் மாறி முகம் பொலிவு பெறும்.

 தயிரை முகத்தில் பூசி ஊற வைத்துக் குளித்தால் முகம் பளபளப்பாகும்.
ryuyut
 ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து பொடி செய்து அதை மோரில் கலந்து பூசி வர முகம் பளபளப்பாகும்.

 பாலுடன் சில துளிகள் கிளசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு பெறும்.

 பாலேட்டை நன்றாக தேய்த்து ஊறவிட்டு முகம் கழுவ முகம் மென்மையுடன் பிரகாசமாகும்.

 கேரட் , ஆரஞ்சு சாற்றுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

 வெள்ளரிச் சாற்றை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ முகம் பளீரென்று இருக்கும்.

 ஆரஞ்சுப் பழச் சாற்றை முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து பயிற்றம் பருப்பு மாவை கொண்டு தேய்த்து முகம் கழுவினால் முகத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும்.

 காய்ச்சாத பாலை பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் பூசி அரைமணி நேரம் கழித்துக் கழுவினால் முகம் பளபளப்பாகவும் மற்றும் மிருதுவாகவும் இருக்கும்.

 பாதாம் பருப்பை பால்விட்டு அரைத்து முகத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். முகத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

 வாழைப் பழத்தை கூழாக்கி அதனுடன் தேனைக் கலந்து பூசி வர முகம் பளபளப்பாகும்.

 கடலைமாவுடன் சிறிது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து முகத்தில் தடவி குளித்தால் நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

 தக்காளியை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து உலர வைத்து கழுவ வேண்டும். முகம் பளபளப்பாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button