மருத்துவ குறிப்பு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கான காரணங்களும்… விளைவுகளும்…

மன அழுத்தம் என்பது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரே அளவிலானவை கிடையாது. இன்றைய காலக்கட்டத்தில், வேலை ஒதுக்கப்பட்ட பின், தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் நம் இலக்கை அடைய முடியாத நேரத்தில் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது.

 

மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் ஒவ்வொருத்தருக்கும் தங்களுக்கென ஒரு பாணியும் அறிகுறிகளும் இருக்கும். அதனால் அது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். அதே போல் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் பாணியும், ஆண்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தின் பாணியிலும் கூட வேறுபாடுகளை காணலாம்.

 

பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், தனித்துவ பாணியை கொண்டிருப்பதற்கு பல காரணிகள் உள்ளது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இனபெருக்க ஹார்மோனை கூறலாம். பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக சமுதாய அழுத்தத்தையும் கூறலாம். இவ்வகை அழுத்தங்களைப் பற்றி உங்களால் விவரங்களை சேகரிக்க முடிந்தால், அதற்கான தீர்வுகளைப் பெறுவதும் சாத்தியமே!

காரணம்

பெண்களின் மரபணுக்கள் மற்றும் மனநிலையும் ஆண்களுடன் ஒப்பிடுகையில் வேறுபடும். ஒரே காரணத்தினால் அனைத்து பெண்களும் மன அழுத்தம் கொள்வதில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. அதில் சிலவற்றை இப்போது பார்க்கலாமா?

 

மலட்டுத்தன்மை மற்றும் கர்ப்பம்

மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹார்மோன் ரீதியான மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. கர்ப்பமாக இருக்கும் காலத்திலும் கூட பெண்களுக்கு பல வகையான ஹார்மோன் ரீதியான மாற்றங்கள் ஏற்படும். கர்ப்பம் தரித்த ஆரம்ப கால கட்டத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கான இடர்பாடும் அதிகமாக உள்ளது. பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

 

உடல்நல பிரச்சனைகள்

பல பெண்கள் பல வகையான உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். உளவியல் ரீதியான உடல்நலக்குறைவுகள், டயட் இருப்பதால் ஏற்படும் தாக்கங்கள், இயலாமை, புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துதல் போன்றவைகளை சில உடல்நல பிரச்சனைகளாக எடுத்துக் கொள்ளலாம். பெண்ணின் உடல்நலம் எப்போதுமே ஆரோக்கியமாக இல்லாததால், மன ரீதியான பிரச்சனைகளாலும் கூட அவள் பாதிக்கப்படலாம். இதனால் மன அழுத்தம் நேரிடலாம்.

 

இறுதி மாதவிடாய்

இறுதி மாதவிடாய் காலத்தின் போது ஒவ்வொரு பெண்ணும் அசாதாரண வகையிலான மனநிலையால் பாதிக்கப்படுவார்கள். இந்த காலத்தின் போது தான் பெண்களுக்கு மாதவிடாய் முழுமையாக நிற்கும். இதனால் குழந்தையை பெற்றெடுக்கும் திறனை அவர்கள் இழப்பார்கள். பெண்களுக்கு இறுதி மாதவிடாய் தொடங்கும் நேரத்தில் இனப்பெருக்க உறுப்பில் மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு ஏற்கனவே மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால், இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

உடல் ரீதியான கோளாறு

பொதுவாக ஒரு பெண் பருவ மாற்றத்தை அடையும் வயதில், மன அழுத்தம் ஏற்படுவதில் பாலின வேறுபாட்டை அறியலாம். அதே போல் பருவடையும் நேரத்தில் தனி நபரில் ஏற்படும் பாலின வேறுபாடும் கூட மன அழுத்தம் ஏற்படுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடல் ரீதியான அதிருப்தி ஏற்படும் போதும் மன அழுத்தம் ஏற்படும். பருவமடையும் போது பெண்களுக்கு பாலியல் ரீதியான வளர்ச்சி ஏற்படுவதும் கூட மன அழுத்தம் ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக விளங்குகிறது.

அளவுக்கு அதிகமான அழுத்தம்

தங்கள் திறனுக்கு மேலாக கூடுதல் வேலையை செய்யும் நபர்களுக்கு அழுத்தங்கள் ஏற்படலாம். ஆண்களுடன் ஒப்பிடுகையில், அலுவலகம் அல்லது வீட்டில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தான் அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களின் படி, ஆண்களை விட பெண்களுக்கு தான் அழுத்தம் தொடர்பான ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும்.

சில காரணங்களால் மன அழுத்தம் அடையும் பெண்கள் எதிர்மறையாக சிந்திப்பார்கள். அவர்கள் மனதில் இருந்து நேர்மறையான எண்ணங்கள் முழுமையாக காலியாகியிருக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button