சரும பராமரிப்பு

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய டிப்ஸ்

சிலர் பார்க்க நல்ல கலராக இருந்தாலும் கை, கால் முட்டிகளில் கருப்பாக இருக்கும். நன்கு தேய்த்துக் குளித்தாலும் அந்த நிறம் மாற மாட்டேனென்கிறது என்று புலம்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எளிய தீர்வு உள்ளது. ஒரு கொய்யாப்பழம் எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் ‘ஸ்க்ரப்’ போல வரும். அத்துடன் ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாறை எடுத்துக் கலந்து கை, கால், மூட்டுகளில் நன்கு தேய்த்து மசாஜ் செய்து நன்றாக காய்ந்ததும் கழுவவும்.

பிறகு அந்த இடத்தில் மாய்ஸ்சரைசர் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 வாரம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், தேன், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்துக் கலக்கி, கருப்பான இடங்களில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இதுவும் விரைவில் நல்ல பலனைத்தரும். தேவைப்பட்டால் பாதாம் பவுடர் சேர்த்துக் கொள்ளலாம். ஆரஞ்சு தோல் பவுடர், பால் இவற்றை சம அளவில் எடுத்து ஒன்றாக குழைத்து முட்டிகளில் பூசி 15 நிமிடத்துக்கு பிறகு கழுவி வந்தாலும் படிப்படியாக கருப்பு நிறம் மாறும். இதனை தினமும் செய்து வர வேண்டும்
maruthuvam

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button