கூந்தல் பராமரிப்புஹேர் கண்டிஷனர்

சோப்பு நுரைகளுக்கு பதிலாக உலர் ஷாம்புவை முயற்சிக்கவும்

Minicut-Hair-Beauty-Studio-RM5-for-Hair-Washபிஸியாக இருக்கும் பெண்களுக்கான‌ அற்புதமான தயாரிப்பு என்று இதை சொல்லலாம். உலர் ஷாம்பு – சவர்க்கார நுரை நீருக்கு (சோப்பு, நுரை) பதிலான‌ ஒரு மாற்று வழியாகும். ஒவ்வொரு நாளும் நீங்கள் முடியை சுத்தம் செய்யவதென்பது இயலாத காரியம்.

மேலும், தினமும் உங்கள் முடியை அலசுவதால் மிருதுவானதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் இருப்பதோடு சிறிது எண்ணெய் பசை தன்மையும் தலையில் இருக்க வேண்டும். இந்த மாதிரி நேரத்திற்கு ஏற்றவாறு இருப்பது உலர் ஷாம்பு ஒரு சிறந்த தேர்வாகும். இதை நீங்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று விட்டு வந்தபிறகும் உபயோகிக்கலாம், மேலும் ஒரு நீண்ட தூர பயணத்தின் போது குளியலறை கிடைக்காது இந்த மாதிரி சமயங்களில் இது பயனுள்ள‌தாக இருக்கும். உலர் ஷாம்பானது பவுடர் வடிவிலும், மற்றும் தெளிப்பு கேன்களிலும் கிடைக்கிறது, உலர் ஷாம்பை உபயோகிப்பதால், முடியானது எணணெய் பசையோடு அழுக்காக இருப்பதை எல்லாம் நீக்கி உங்கள் முடிக்கு சுத்தமான தோற்றம் அளிக்கிறது. இதை தினமும் பயன்படுத்துவதை விட வாரத்திற்கு மூன்று முறை அல்லது அதை விட குறைவாக உபயோகிப்பதன் மூலம் ஒரு நல்ல தோற்றம் கிடைக்கும்.

 

இதை எப்படி பயன்படுத்த வேண்டும்:
உலர் ஷாம்பு எப்போதும் உலர்ந்த, க்ரீஸ் முடிகளுக்கு ஏற்றது. இதை தலைமுடி ஈரமாக இருக்கும் போது உபயோகித்தால் முடியானது சிக்கலாகி விடும் மேலும் கலைந்து விடும். உலர் ஷாம்புவை தலையில் அழுத்தி தேய்க்க வேண்டாம், இது பவுடர் வடிவில் கிடைப்பதால் தலையில் தூவி விட்டால் போதும். நீங்கள் ஸ்பிரே உபயோகிப்பதாக இருந்தால் என்றால் நீங்கள் உச்சந்தலையில் இதை நேரடியாக தெளிக்க கூடாது, உங்கள் தலையில் இருந்து பல அங்குல இடைவெளி விட்டு தெளிக்கவும். ஒரு சில நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சீப்பு அல்லது ஹேர் ட்ரையரால் உலர்த்தி உங்களுக்கு தேவையான சிகை அலங்காரத்தை செய்யவும்.

செய்ய வேண்டியது மற்றும் செய்ய கூடாதது:
ஒரு வரிசையில் இரண்டு மடங்கிற்கும் அதிகமாக உலர் ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு வழக்கமான ஷாம்பு கொண்டு உங்கள் முடியை கழுவிய பின்னர் இருமுறை உலர் ஷாம்பு பயன்படுத்த வேண்டும். இதற்கு பின் உங்கள் முடியில் செதில்கள் மற்றும் மற்ற குப்பைகள் இருந்தால், மறுபடியும் வழக்கமான ஷாம்புவை உபயோகப்படுத்த வேண்டாம்.

ஸ்பிரே கொண்டு தெளித்த‌ பிறகு 3 முதல் 4 நிமிடங்கள் காத்திருக்கவும், இது எண்ணெயையும், அழுக்கையும் உறிஞ்சும் வரை. இப்பொழுது ப்ரஷ் யை கொண்டு உங்கள் முடியை வாரவும், தேவையென்றால் சிறிது பவுடரை பயன்படுத்தலாம்.

உங்கள் உச்சந்தலையில் மறந்தும் உலர் ஷாம்புவை தேய்க்க கூடாது. அப்படி தேய்த்தால் அது உங்களின் தோல் துளைகளை மூடுவதோடு, வ‌றட்சியையும் மற்றும் அரிப்பையும் ஏற்படுத்தும்.
(உள்ளீடுகள் எடுக்கப்பட்டது: அழகு நிபுணர்களான‌ ஷானாஸ் ஹுசைன் மற்றும் திஷா கபூர் குரானா)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button