33.3 C
Chennai
Monday, May 12, 2025
podku.jpg.pagespeed.ce .grjOmvt38w
தலைமுடி சிகிச்சை

பொடுகு என்றால் என்ன?

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம்

உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.

“பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.

எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்

இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.

பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

எவ்வாறு தவிர்க்கலாம்

1.தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம்.

இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.”பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு மருத்துவரை பார்க்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.

6. வாரம் ஒரு முறையாவது நல்லெண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகுக்கு ரொம்ப நல்லது.

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.
podku.jpg.pagespeed.ce.grjOmvt38w

Related posts

கூந்தலுக்கு வைத்தியம்

nathan

எப்போது முடி நரைக்க தொடங்கும்

nathan

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இந்த நேச்சுரல் ஷாம்பு யூஸ் பண்ணுங்க…

nathan

பட்டுப் போன்ற கூந்தல் கிடைக்க செம்பருத்தி மாஸ்க்!

nathan

இரண்டே வாரங்களில் தலைமுடி அடர்த்தியாக வளர ஈஸி டிப்ஸ்…

nathan

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டுமா…..பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! தலையில் ஏற்படும் பருக்களை போக்குவதற்கான எளிய வீட்டு வைத்திய குறிப்புகள்!

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்கும் அற்புத ஹேர் மாஸ்க்!இத ட்ரை பண்ணி பாருங்க…….

nathan

எண்ணெய்ப் பசையான கூந்தல்

nathan