வயிற்றுப் புழுக்கள், வயிற்றுப் புண் நீங்க பாட்டி வைத்தியம்

பிரண்டை இலையுடன், வேப்பிலை (சிறிது), மிளகு (3) மூன்றையும் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள் ஒழியும்.

நல்வேளைக் கீரையை கைப்பிடி அளவு, மூன்று மிளகு, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து தினமும் காலையில் சாப்பிட்டால் வயிற்றுப் புழுக்கள், கீரிப்பூச்சி, நாக்குப் பூச்சி கோளாறுகள் தீரும்.

வயிற்றுப் புண்:-

ஒரு கைப்பிடி மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு மாசிக்காயை சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் குணமாகும். முள்ளங்கிக் கீரையை வெந்தயம் ஊற வைத்த நீரில் அரைத்துச் சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.

சாணாக்கிக் கீரையை பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் குணமாகும்.

Leave a Reply