பேப்பர் ரோஸ்ட் தோசை

அரைக்க தேவையானப்பொருட்கள்:

புழுங்கல் அரிசி -3 கப்

பச்சை அரிசி -1கப்

உழுத்தம் பருப்பு -1கப்

வெந்தயம் -1 1/4 தேக்கரண்டி

தோசை மாவு செய்யும் முறை

முதலில் அரிசி மற்றும் பச்சரிசி கலந்து ஊற வைக்கவும் உழுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் தனித்தனியே பாத்திரங்களில் ஊற வைக்கவும்
முதலில் உழுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கவும்
தேவைப்பட்டால் அரைப்பதற்கு சிறிது நீர் சேர்க்கவும்
உழுத்தம் பருப்பு மென்மையாக அரைந்ததும் அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும்
பின்பு அரிசி மற்றும் பச்சரிசியையும் அதே போல் அரைக்க வேண்டும்
பினபு அவற்றையும் அதே பாத்திரத்தில் ஊற்றி இரண்டையும் நன்றாக கலக்க வேண்டும்

தோசைக்குத் தேவையான மாவு ரெடி

தேவையான பொருட்கள்:

தோசை மாவு
எண்ணெய

செய்முறை:

தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும்

கரண்டியில் மாவை எடுத்து தவாவில் விட்டு அதனை பரப்பி விடவும்

பின்பு அதன் விளிம்பு மற்றும் மையப் பகுதியில் எண்ணெயை தெளித்து விடவும்

மேல் பகுதி மென்மையாகத் துவங்கும்

மேல் பகுதி மென்மையாகி பொன்னிறமானதும் அதனை ஒரு முனையிலிருந்து மடிக்கவும்

பின்பு அடுத்தப் பக்கத்தையும் மடிக்கவும்

பின்பு அதனை எடுத்து சூடாக பரிமாறவும்

Leave a Reply