ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

மருத்துவ குறிப்புகள்

images (14)பலா பிஞ்சினை அதிகமாக உண்பதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படும். பலாப் பழத்தை அளவுடன்தான் சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிட்டால், வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் ஏற்படுத்தும்.
பலாப் பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். குடல்வால் அலற்சி அதாவது அப்பன்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப் பழத்தை சாப்பிடவே கூடாது.
பலாக் கொட்டையை சுட்டு சாப்பிட்டால் அல்லு மாந்தம், மலச்சிக்கல், புளியேப்பம், கல் போன்று வயிறு கட்டிப்படல் ஏற்படும்.
பலாப் பிஞ்சினை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

சிறிது தண்ணீ­ரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டிகொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button