முகப் பராமரிப்பு

முகப் பொலிவிற்கு!

சிலரது கன்னங்கள் குழிவிழுந்து முகம் பொலிவற்று காணப்படும். கன்னங்கள் குழிவிழுவதால் கண்களும் இருண்டு, பொலிவின்றி இருக்கும். இதனால் முகத்தை எவ்வளவு அழகுப்படுத்தினாலும் வயது முதிர்ந்தவர்போல் தோற்றம் தரும்.

இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள். தலைசிறந்த மருத்துவர்கள் பலர் முகத்தை வைத்தே என்ன நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்துகொள்வார்கள்.
பொதுவாக கன்னங்கள் குழிவிழுவதற்கு காரணம், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தின்மையும் ஒரு காரணம். மது, புகை, போதை போன்ற தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்களுக்கு கன்னங்கள் எளிதில் குழிவிழுந்துவிடும். இந்தக் கன்னக் குழிகளை மாற்றி முகத்தை பொலிவாக்க தினமும் காலையில் எழுந்து பல்துலக்கிவிட்டு 1/2 லிட்டர் அளவு தண்­ர் அருந்த வேண்டும். பின் சிறிது தூரம் நடைப்பயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1 ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும்.

தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும்.

புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் ஜீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.

உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும்.

பப்பாளிப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.

தினமும் ஏதாவது ஒரு கீரை, பசுநெய் சேர்த்துக்கொள்வது நல்லது.

உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும்.

மேலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஆனந்தம் அழகைக் கூட்டும்.
beauty2

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button