பிற செய்திகள்

நீண்ட நாள்களாக என் காதலை வெளிப்படுத்தவில்லை. கல்யாணத்திற்கு பிறகுதான் எங்களுடைய ரொமான்டிக் ரிலேஷன்ஷிப் ஆரம்பமானது..விஜய் டிவியின் பாவம் கணேசன் நேஹா கவுடா

கல்யாண பரிசு தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நேஹா கவுடா, தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரில் நடித்து வருகிறார். குணவதி எனும் கதாபாத்திரத்தில் ரவுடி பேபியாக வலம்வந்துகொண்டிருப்பவரின் தன் உண்மையான காதல் கதை ப்ரீகேஜியில் தொடங்கியது என்றால் நம்ப முடிகிறதா? தன்னுடைய காதல் கணவர் பற்றியும் அவர்களுடைய காதல் பற்றியும் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார் நேஹா கவுடா.

Neha Gowda

பிப்ரவரி 18, 2018-ல் திருமணமான நேஹா மற்றும் சந்தனின் லவ் ஸ்டோரி ப்ரீ நர்சரியிலேயே தொடங்கியிருக்கிறது. ‘ப்ரீ நர்சரி படிக்கும்போதே ஒருவருக்கொருவர் தெரியும். முதலாம் வகுப்பில், ஒரு காகிதத்தில் ‘லவ் யு’ என எழுதி பந்துபோல் உருட்டி என்மீது தூக்கி எறிந்தார். அப்போவே சார் ப்ரொபோஸ் பண்ணியாச்சு. ஆனால், எனக்கு சந்தன் என்றாலே பயம். ஒருமுறை பள்ளியில் நடனம் ஆடவேண்டிய நிலையில் எனக்கு ஜோடியாக சந்தன்தான் வந்தார். அப்போது பயங்கரமாக அழுது என்னுடைய பார்ட்னரை மாற்றினேன்.

அதுமட்டுமில்லாமல் சிறிய வயதில் நான் அவரைவிடக் கொஞ்சம் உயரம் அதிகம். ஆனால், பிறகு அவர் வாலி பால் பிளேயராகிவிட்டார். இப்போது இருவரும் சரிசமமாக இருக்கிறோம். ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் நானே அவரிடம் ப்ரொபோஸ் செய்தேன். ஆனால், அப்போது அவர் எதுவும் சொல்லவில்லை. பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் போதுதான் எனக்கு ரிப்லை செய்தார்.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் ஹாஸ்டலில் சேர்ந்து படித்தார். இந்த 4 வருடத்தில் 8 முறைதான் நாங்கள் தொலைபேசியில் பேசியிருக்கிறோம். அதுவும் வருடா வருடம் காதலர் தினம் மற்றும் அவருடைய பிறந்தநாளுக்கு நான்தான் அழைப்பேன். என்னுடைய வாழ்த்துக்கு வெறும் நன்றி மட்டும் கூறிவிட்டு போனை கட் செய்துவிடுவார். இப்படிதான் நான்கு ஆண்டுகள் நகர்ந்தன.

இவருக்குப் பெண் நண்பர்களே இல்லை. அதனாலேயே பெண்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்பதுகூட தெரியாது. நானே பெண் நண்பர்கள் வைத்துக்கொள் என்று பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்சம் பரவாயில்லை. பத்தாம் வகுப்பிற்கு பிறகும், அவ்வளவாகப் பார்த்துக்கொண்டதில்லை’ என்று கூறும்போதே சந்தன் பேசத்தொடங்கினார்.

‘படிக்கிற வயசுல படிக்கணும் என்றுதான் நினைத்திருந்தேன். அதனால்தான், எனக்கு நேஹாவை பிடித்திருந்தாலும், நீண்ட நாள்களாக என் காதலை வெளிப்படுத்தவில்லை. கல்யாணத்திற்கு பிறகுதான் எங்களுடைய ரொமான்டிக் ரிலேஷன்ஷிப் ஆரம்பமானது. இப்போ வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு கோவமே அவ்வளவா வராது. நேஹாவுக்கு கோவம் வந்தா வார்த்தையே வராது. கொரோனா பிரச்னை, லாக்டவுன் எல்லாம் முற்றிலும் முடிந்ததும் நிறைய டிராவல் பண்ணனும்’ என்று நிறைவு செய்கிறார் சந்தன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button