கிய புகைப்படம்
Other News

சுவையான கொத்தமல்லி வடை

விலை மலிவில் கிடைக்கும் கீரை தான் கொத்தமல்லி. உணவுகளை அலங்கரிக்கப் பயன்படும் கொத்தமல்லியானது, உணவின் சுவையை அதிகரிப்பதோடு, உடலுக்கு வேண்டிய சத்துக்களையும் கொடுக்கிறது. இந்த கொத்தமல்லியைக் கொண்டு வடை செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா?

அதிலும் குளிர்ச்சியான மாலை வேளையில் டீ/காபியுடன் வீட்டில் இருக்கும் கொத்தமல்லியைக் கொண்டு வடை செய்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். இங்கு கொத்தமல்லி வடையின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 2 கப்
கொத்தமல்லி – 1 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மாங்காய் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, கொத்தமல்லி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மாங்காய் தூள், மிளகாய் தூள் மற்றும் அரிசி மாவு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

பின்பு அதில் பிசைந்து வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, வடைகளாக தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னறிமாக பொரித்து எடுத்தால், சுவையான கொத்தமல்லி வடை ரெடி!!!

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… சுயதொழிலில் சாதிக்கலாம்

nathan

கள்ளக்காதல்.. கண்டித்தும் கேட்காத நண்பன்

nathan

வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ப்ரியா பவானி சங்கர்

nathan

படையப்பா படத்தில் வந்த இந்த குழந்தை பிரபல நடிகையா?

nathan

வெளியான தகவல்! சீனாவில் இருந்து வரும் மற்றொரு வைரஸ்! இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

nathan

இந்த ராசியில் பிறந்த பெண்களை ஆண்கள் விரும்புவார்களா?

nathan

கெடாமல் இருக்கும் கன்னியாஸ்திரியின் உடல்!

nathan

மௌனிகா சொன்ன உருக்கமான விஷயம் -இறப்பதற்கு முன் ரெண்டு சத்தியம் வாங்கினார்

nathan

நீங்களே பாருங்க.! வாய்ப்பு கிடைக்காமல் பலான படங்களில் நடித்த நடிகைகள்..

nathan