29.7 C
Chennai
Friday, May 24, 2024
7 pickle2
ஆரோக்கியம் குறிப்புகள்

ஊறுகாய் இல்லாம சாப்பாடு இறங்காதா உங்களுக்கு..? உங்களுக்குதான் இந்த விஷயம்!

இந்தியாவில் ஊறுகாய் மிகவும் பிரபலமான ஒரு உணவுப் பொருள். அத்தகைய ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், காரசாரமாகவும் இருக்கும். சிலருக்கு சாப்பிடும் போது ஊறுகாய் இல்லாவிட்டால் சாப்பாடே வயிற்றில் இறங்காது. அந்த அளவில் ஊறுகாயானது அதன் சுவையால் பலரை அடிமையாக்கி வைத்துள்ளது.

 

ஊறுகாயில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் இந்த உணவுப் பொருள் தான் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தும் பொருட்கள் தான். என்ன தான் ஊறுகாயை தினமும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக உயிரை கொல்லும்.

இப்போது ஊறுகாயை அன்றாடம் எடுத்து வந்தால், என்ன பிரச்சனைகளை சந்திக்கக்கூடும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

நீரிழிவு

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமைக்கு உள்ளாகக்கூடும்.

இதய நோய்

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து, இதய நோய்க்கு வழிவகுக்கும்.

செரிமான பிரச்சனைகள்

ஊறுகாய் சாப்பிடுவது கெட்டதா? ஆம். ஏனெனில் ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

வயிற்று உப்புசம்

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

உயர் இரத்த அழுத்தம்

அதிக அளவில் உப்பு எடுத்தால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் உடலில் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தடுக்கப்படுவதோடு, அதனால் இதய நோய் வருவதையும் தவிர்க்கலாம்.

அல்சர்

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

குறிப்பு

என்ன தான் ஊறுகாய் உணவின் சுவையை அதிகரித்தாலும், இவற்றை அன்றாடம் உணவில் சேர்ப்பது நல்லதல்ல. அதற்காக ஊறுகாயை சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

Related posts

கட்டாயம் இதை படியுங்கள்.. கட்டாயம் இதை படியுங்கள்

nathan

வால்நட் எண்ணெயின் அழகு நன்மைகள்!, beauty tips in tamil

nathan

வீட்டில் தனியாக இருக்கும் போது உங்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்வது?

nathan

ஏன் தெரியுமா? குள்ளமாக இருப்பவர்களால் வேகமாக உடல் எடையைக் குறைக்க முடியாது

nathan

தெரிஞ்சிக்கங்க… மிகவும் ஆரோக்கியமற்ற சில காலை உணவுகள்!!!

nathan

வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’…டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ஷாப்பிங் போகலாமா..?

nathan

பேன் தொல்லையை போக்கும் எளிமையான கைமருந்துகள்

nathan

பெண் குழந்தைகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அவசியம் – தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்த மாதிரி காதலி கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்…! நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

nathan