உடல் எடையை குறைக்க நீங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டதா. கவலை வேண்டாம். பப்பாளி காய் சாப்பிடுவதன் மூலம் அதிகப்படியான உடல் கொழுப்பை வேகமாக குறைக்கலாம். இது எடை இழப்புக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் தருகிறது. ஆனால் பப்பாளி காய் சாப்பிட சரியான நேரத்தை தேர்வு செய்ய வேண்டும்.
பப்பாளி காய் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
ஆலோசகர் டயட்டீஷியன் டாக்டர் ரஞ்சனா சிங் இது பற்றி கூறுகையில், பப்பாளி பழத்தை போலவே, பப்பாளி காயும் உங்களுக்கு பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ ஆகிய ஊட்டசத்துக்களுடன் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் அதிகம் உள்ளன. இது மட்டுமல்லாமல், இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகிறது.
எடை இழப்புக்கு, இந்த நேரத்தில் பப்பாளி காயை சாப்பிடுங்கள்
பப்பாளிப் பழத்தை விட பப்பாளி காயில் சுறுசுறுப்பை கொடுக்கும் ஆரோக்கியத்தை வழங்கும் என்சைம்கள் உள்ளன, அவற்றில் பப்பேன் (papain) மற்றும் சைமோபபைன் (chymopapain) மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டயட்டீஷியன் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். அவை உடலுக்கு புரதங்கள் வழங்குவதோடு, செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இதன் காரணமாக நீங்கள் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக உணருகிறீர்கள். நீங்கள் காலை உணவுக்காக அல்லது மதிய உணவுக்கும் இரவு உணவிற்கும் இடையில் பாப்பாளிக் காயை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
பப்பாளி காயின் ஆரோக்கிய நன்மைகள்
– டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில்,பப்பாளி காயை சாப்பிடுவதன் மூலம் பின்வரும் நன்மைகளும் கிடைக்கின்றன.
– பப்பாளி காயை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உடலில் இரத்த குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
– பப்பாளி காயில் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை தீர்க்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
– இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக்குகின்றன.
– பப்பாளி காயை உட்கொள்வது எந்தவொரு காயத்தையும் குணப்படுத்தும் உடலின் திறனை அதிகரிக்கிறது.