21 60ed32b7459c4
அழகு குறிப்புகள்

இலங்கையில் சட்டவிரோத கருக்கலைப்பால் நேர்ந்த விபரீதம்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோரா தோட்ட மேற்பிரிவிலுள்ள வீடொன்றில், நான்கு பிள்ளைகளின் தாயொருவர் (வயது 36) திடீரென இறந்துள்ள சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்றுக்காலை இடம்பெற்றுள்ளது.

தகவலறிந்து அவ்வீட்டுக்குச் சென்ற பொலிஸார், வீட்டிலிருந்த இரத்தகரைபடிந்த ஆடைகள் சிலவற்றையும் மீட்டுள்ளனர். அத்துடன் கூடையொன்றுக்குள் இருந்து சுமார் 7 மாதங்கள் மட்டுமே மதிக்கத்தக்க பெண் சிசுவொன்றின் சடலத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

வீட்டுக்குள் வைத்து மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதமான கருக்கலைப்பு காரணமாகவே, இவ்விரு உயிரிழப்புகளும் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து மரணமடைந்த பெண்ணுடன் அடிக்கடி தொடர்பை பேணிவந்த 35 வயதான பெண்​ ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

அத்துடன், ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை இடம்பெற்றதன் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலம், டிக்கோயா-கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.21 60ed32b76a4b2 21 60ed32b75ba65 21 60ed32b7459c4 21 60ed32b72eb6b

Related posts

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

nathan

பிரபுதேவாவுக்கு கோடியில் அள்ளிக்கொடுத்த நயன் தாரா..

nathan

இதில் ஒன்றை முயற்சி செய்யுங்கள்!! முகத்தில் உள்ள மேடு பள்ளங்களை எளிதில் மறைய..

nathan

தமிழ் பெண் கண்ணம்மாவா இது?புடவையில் வைலரகும் புகைப்படம்

nathan

உங்களுக்கு தெரியுமா அழகு பராமரிப்பில் பயன்படும் அரிசி கழுவிய நீர்…!!

nathan

எங்கள் திருமணத்தால் சம்பாதித்துவிட்டார்கள் –

nathan

பானிபூரி பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சி! உருளைக்கிழங்கில் மிதந்த புழு..

nathan

சாண்டி மகள் லாலாவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள்?

nathan

சுவையான பாலக்கீரை கோதுமை தோசை

nathan