அழகு குறிப்புகள்

சுவையான மட்டன் கீமா சாக்

மட்டன் கீமா சாக் ரெசிபி மிகவும் ஏற்றதாக இருக்கும். இதில் மட்டனுடன், கீரையும் இருப்பதால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும். மேலும் இந்த மட்டன் கீமா சாக் ரெசிபியானது சாதம் மற்றும் சப்பாத்திக்கு சூப்பராக இருக்கும். சரி, இப்போது அந்த மட்டன் கீமா சாக் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Kheema Saag Recipe For Ramzan
தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா – 750 கிராம்
பசலைக்கீரை – 3 கட்டு (நறுக்கியது)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (நறுக்கியது)
அரைத்த தக்காளி – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

செய்முறை:

முதலில் கீமாவை நன்கு நீரில் கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் மல்லி தூள் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி, மிளகுத் தூள், சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் ஊற வைத்துள்ள மட்டன் கீமாவை சேர்த்து 4-5 நிமிடம் குறைவான தீயில் கிளறி விட வேண்டும்.

எப்போது மட்டனில் இருந்து தண்ணீர் வெளிவர ஆரம்பிக்கிறதோ, அப்போது அரைத்த தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் பசலைக்கீரையை சேர்த்து பிரட்டி, பின் உப்பு தூவி குறைவான தீயில் 5-7 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

கீமா மற்றும் கீரையானது நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லி தூவி நன்கு பிரட்டி இறக்கினால், கீமா சாக் ரெடி!!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button